4 மகன்கள் இருந்தும்.. பஸ் ஸ்டாண்டுல தங்கும் நிலை.. கண்ணீருடன் போலீசில் மனு கொடுத்த வயசான தம்பதி.. இதயத்தை நொறுங்க செய்த சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மயிலாடுதுறையில் தன்னுடைய சொத்தை எழுதி வாங்கிக்கொண்டு தன்னை கவனிப்பதில்லை என வயதான தம்பதியர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்திருக்கின்றனர். இது அப்பகுதி மக்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

4 மகன்கள்
மயிலாடுதுறை மாவட்டம் கோடங்குடி கிராமத்தை சேர்ந்தவர் தங்கசாமி. 85 வயதான இவர் தனது மனைவி சாரதாம்பாள் (75) உடன் வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு 4 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு தங்கசாமி தன்னிடத்தில் உள்ள விவசாய நிலங்களை தனது மகன்களின் பெயரில் எழுதி கொடுத்திருக்கிறார். அதில் மகன்களுக்கு தலா 4 மா விவசாய நிலமும், வீட்டை பிரித்தும் தனித்தனியாக எழுதிக் கொடுத்திருக்கிறார் தங்கசாமி.
அப்போது, தனக்கென 4 மா நிலத்தை பிரித்துக்கொண்ட தங்கசாமி குடியிருக்க குடிசை வீடு ஒன்றையும் வைத்துக்கொண்டுள்ளார். விவசாயம் செய்து அன்றாட செலவுகளை இந்த தம்பதி சமாளித்து வந்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த தம்பதியின் மூத்த மகன் உத்திராபதி, தங்கசாமியின் பங்கையும் எழுதி வாங்கியதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து பெற்றோரை அந்த குடிசை வீட்டில் இருந்தும் அவர் வெளியேற்றியதாக தெரிகிறது.
போலீசில் புகார்
இதுகுறித்து பெரம்பூர் காவல் நிலையத்தில் தங்கசாமி - சாரதாம்பாள் தம்பதி புகார் அளித்திருக்கின்றனர். ஆனால், உத்திராபதி தனது பெற்றோருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த தம்பதியின் மற்ற மகன்களும் அவர்களை கவனிக்க முன்வராததால், வேறு வழியின்றி பேருந்து நிலையத்தில் தனது மனைவியுடன் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் தங்கசாமி.
இந்நிலையில், தங்களிடம் இருந்து விவசாய நிலத்தை தங்களது மகன் ஏமாற்றி வாங்கிக்கொண்டதாகவும், அவரிடமிருந்து நிலம் மற்றும் வீட்டை மீட்டுக்கொடுக்கும்படியும் தங்கசாமி - சாரதாம்பாள் தம்பதி மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கின்றனர். இதனையடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் உள்ளூர் மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Also Read | வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள சட்ட விதிகள் சொல்வது என்ன? முழு விபரம்..!

மற்ற செய்திகள்
