மண்டை மேல இருக்குற கொண்டையை மறந்த திருடன்.. "திருட போன எடத்துல இவ்ளோ ஞாபக மறதியா?".. சுவாரஸ்யம்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Oct 10, 2022 08:13 PM

நாமக்கல் அருகே திருட வந்த இடத்தில் திருடன் செய்த விஷயம் தொடர்பான செய்தி ஒன்று தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

namakkal thief charges his phone at where he come to steal

Also Read | 4வது திருமணம் ஆன 4 மாதத்தில் காணாமல் போன புதுப்பெண்.! விசாரணையில் காத்திருந்த ட்விஸ்ட்..!

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் என்னும் பகுதியில் உணவகம் ஒன்று உள்ளது. இதனை அதே பகுதியை சேர்ந்த சித்திரவேல் என்பவர் நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

எப்போதும் போல, தனது உணவகத்தை நடத்தி விட்டு இரவு நேரத்தில் அதனை மூடி விட்டு சென்றுள்ளார் சித்திரவேல்.

namakkal thief charges his phone at where he come to steal

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பாக, இரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர், சித்திரவேல் உணவகத்தில் நுழைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் இருட்டு என்பதால் அந்த மர்ம நபர் டார்ச் லைட் அடித்த படி, திருட்டு வேலையிலும் ஈடுபட்டுள்ளார். முதலில் அங்கிருந்த இருச் சக்கர வாகனம் ஒன்றை திருட முயன்றுள்ளார் அந்த மர்ம நபர். ஆனாலும், அதனை நகர்த்த முடியாத காரணத்தினால் அந்த முயற்சியை அவர் கைவிட்டுள்ளார்.

namakkal thief charges his phone at where he come to steal

இதன் பின்னர் அந்த நபர் கல்லா பக்கம் ஒதுங்கி உள்ளார். இதற்கு மத்தியில் அவரிடம் இருந்த செல் போனில் சார்ஜ் இல்லாமல் போனதாக தெரிகிறது. இதனால், திருடும் வரையில் அங்குள்ள கல்லாப்பெட்டி அருகே தனது மொபைலை சார்ஜ் போட்டுள்ளார். இதன் பின்னர், கல்லா பெட்டியை திறந்து அதிலிருந்து 20 ஆயிரம் ரூபாயை அந்த ஆசாமி எடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

பணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சுவரேறி குதித்து தப்பித்துள்ளார் அந்த மர்ம நபர். அந்த சமயத்தில் அக்கம் பக்கத்தினர் அவரை பார்த்து விட்ட நிலையில், அதற்குள் திருடன் தப்பித்து ஓடி விட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, சித்திரவேலுக்கும் தகவல் கொடுக்கப்பட உடனடியாக தனது உணவகத்திற்கு அவர் வந்து சேர்ந்துள்ளார்.

namakkal thief charges his phone at where he come to steal

தனது கடையில் நடந்த திருட்டு தொடர்பாக போலீஸ் நிலையத்திலும் புகார் ஒன்றை சித்திரவேல் அளித்திருந்தார். தொடர்ந்து அவர்களும் உணவகம் வந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதனிடையே, திருடும் நேரத்தில் திருடன் வைத்துக் கொண்டு சென்ற மொபைல் போனும் அங்கேயே இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதன் அடிப்படையிலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தன்னை எளிதில் பிடிப்பதற்காக திருடனே தடயத்தை விட்டு சென்றுள்ளதால் விரைவில் அவர் குறித்த தகவலறிந்து போலீசில் பிடிபடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read | 48 வயசுல விவாகரத்து.. துணை தேடி செயலியில் நேரம் செலவிட்ட பெண்.. "இப்டி ஒரு ட்விஸ்ட் நடக்கும்'ன்னு எதிர்பார்த்திருக்கவே மாட்டாங்க"

Tags : #NAMAKKAL #THIEF #PHONE #STEAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Namakkal thief charges his phone at where he come to steal | Tamil Nadu News.