வீட்டுக்கு தெரியாம காதல் திருமணம் செய்துகொண்ட மகள்.. கோர்ட்டுக்கு சென்ற பெற்றோர்..மணப்பெண்ணுக்கு ஜட்ஜ் கொடுத்த வார்னிங்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகாதல் திருமணம் செய்துகொண்ட மகளை மீட்டுத் தரும்படி கர்நாடக உயர்நீதி மன்றத்திற்கு சென்றிருக்கிறார்கள் மணப்பெண்ணின் பெற்றோர். இந்த வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வெளியிட்டுள்ளது.

Also Read | "கணவரை கொலை செய்வது எப்படி..?" புத்தகம் எழுதிய 71 வயது பெண்மணிக்கு 25 வருடம் சிறை தண்டனை.. என்ன நடந்தது.?
காதல் திருமணம்
பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி படித்துவந்த தனது மகள் நிசர்காவை காணவில்லை என்று டி எல் நாகர்ஜு என்பவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்திருந்தார். தனது மகளை டிரைவரான நிகில் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் நிசர்காவும் நிகிலும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது நீதிபதி முன்பாக 2003 ஆம் ஆண்டு பிறந்த தான் வயதில் மேஜர் என்றும் நிகிலைத் தன் விருப்பப்படியே திருமணம் செய்து கொண்டதாகவும் நிசர்கா கூறினார். மேலும், தனது பூரண சம்மதத்துடனேயே இந்த முடிவை எடுத்ததாகவும், மீண்டும் பெற்றோருடன் வாழ விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
அறிவுரை
இந்த வழக்கில் இருதரப்பினரின் வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் சில அறிவுரைகளை நிசர்காவிற்கு வழங்கினர். அதில்,"குழந்தைகளுக்காக உயிரை தியாகம் செய்த பெற்றோர்களும், பெற்றோருக்காக உயிரை தியாகம் செய்த குழந்தைகளும் உள்ளனர் என்பதை நமது வரலாறு வெளிப்படுத்துகிறது. பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே அன்பும் பாசமும் இருந்தால், குடும்பத்தில் விரிசல் ஏற்படாது. அதன் மூலம் உரிமைகளை பாதுகாக்க குழந்தைகளோ பெற்றோரோ நீதிமன்றத்திற்கு வரவேண்டிய அவசியம் இருந்திருக்காது. காதலுக்கு கண்கள் கிடையாது. பெற்றோர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சமூகத்தின் அன்பு மற்றும் பாசத்தை விட சக்திவாய்ந்த ஆயுதம் காதல்" என்றனர்.
மேலும், புதுமண தம்பதிகளுக்கு எச்சரிக்கை ஒன்றையும் நீதிபதிகள் விடுத்தனர் அதில்," வாழ்க்கை எதிர்வினைகளை கொண்டது என்பதையும் குழந்தைகள் அறிந்துகொள்ள வேண்டிய நேரம் இது. இன்று உங்களது பெற்றோர் சந்திக்கும் நிலை நாளைக்கு உங்களுக்கும் வரலாம்" என்றனர். பின்னர் டி எல் நாகர்ஜு தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர் நீதிபதிகள்.

மற்ற செய்திகள்
