"பசிக்குதுனு பிஸ்கட் வாங்கப் போனான்!".. 'ஊரடங்கை' மீறியதாகக் கூறப்படும் 22 வயது 'இளைஞருக்கு' நேர்ந்த 'சோகம்'.. கதறி அழும் தந்தை! வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Apr 20, 2020 02:16 PM

உத்தரப் பிரதேசத்தில் ஊரடங்கு நேரத்தில் பிஸ்கட் வாங்க சென்ற 22 வயது இளைஞரை தடுத்து நிறுத்தி காவலர்கள் அடித்ததாகக் கூறப்படும் நிலையில் அந்த இளைஞர் 3 நாட்கள் கழித்து இழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

22 yr old youth died allegedly after being beaten up by cops

உத்தரப் பிரதேசத்தின் அம்பேத்கர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது தினக்கூலி பணிசெய்துவந்த இளைஞர் ரிஸ்வான் அஹமத், கடந்த ஏப்ரக் 15-ஆம் நாள் மாலை 4 மணி அளவில், தனக்கு பசிக்கிறது என்று சொல்லிவிட்டு அதே பகுதியில் உள்ள மளிகைக் கடைக்கு பிஸ்கட் வாங்கச் சென்றதாகவும், அப்போது வழியில் தபால் அலுவலகம் அருகில் இருந்த ஒரு பெண் காவல் அதிகாரியும், சில காவலர்களும் அவனைத் தடுத்து நிறுத்தி, ஊரடங்கு நேரத்தில் வெளியே வந்ததால் அடித்ததாகவும், இதனால் அவரது உடலில் காயங்கள் ஏற்பட்டதாகவும், ஆனால் ஊரடங்கின் காரணமாக ரிஸ்வானுக்கு வீட்டிலேயே வைத்திய பார்த்து, பின்னர் அஜாபூரிலுள்ள மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றதாகவும், பின்னர் அங்கிருந்து மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அம்மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகவும், ஆனால் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி ரிஸ்வான் உயிரிழந்ததாகவும் ரிஸ்வானின் தந்தை கண்ணீர் விட்டு கதறியபடி தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஏப்ரல் 15-ஆம் தேதி மாலை ஜஷாபூர் பகுதியில் உள்ள கடைக்கு பிஸ்கட் வாங்கச் சென்றதாகக் கூறப்படும் ரிஸ்வானை போலீஸார் தாக்கியதாகவும், ஆனால் தன் மகன் பிஸ்கட் வாங்கவே வெளியே சென்றான் என்றும் ரிஸ்வானின் தந்தை

கண்ணீர் மல்க பேசி போலீஸாரின் காலில் விழுந்து கதறி அழுது பேசும் வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது. எனினும் இதுபற்றி பேசிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவினாஷ் குமார் மிஸ்ரா, விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதேசமயம் ரிஸ்வானின் பிரேதப் பரிசோதனை ரிப்போர்ட் வந்தபிறகுதான் முழுமையான விபரங்கள் தெரியவரும் என்றும் தெரிவித்துள்ளார்.