முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வத்தின் தாயார் மரணம்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்
முகப்பு > செய்திகள் > தமிழகம்முன்னாள் தமிழக முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக தேனி தனியார் மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் அங்கிருந்து வீடு திரும்பிய அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவருக்கு வயது 95.
பழனியம்மாள் கடந்த டிசம்பர் மாதம் மதுரையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார். இதனை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பழனியம்மாள் அனுமதிக்கப்பட்டார்.
அதன்பின்னர் வீட்டிற்கு திரும்பிய அவர் சில தினங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் தற்போது அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருப்பது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து, ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
