ஆந்திராவின் முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவ் மகள் மறைவு.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்!.. தீவிர விசாரணையில் போலீஸ்
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான என்.டி. ராமாராவின் நான்காவது மகளான உமா மகேஸ்வரி உயிரிழந்துள்ள தகவல், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர திரை உலகில், சூப்பர் ஸ்டாராகவும், மாநில முதல்வராகவும் பொறுப்பில் இருந்து புகழ் பெற்றவர் என்.டி. ராமாராவ். இவரின் நான்காவது மகளான உமா மகேஸ்வரி, கடந்த சில மாதங்களாக உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்நிலையில், ஹைதராபாத் ஜூப்லி ஹில்ஸில் உள்ள வீட்டில், தனது அறையில், தூக்கிட்ட நிலையில், உயிரிழந்து கிடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக, சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்த நிலையில், உமா மகேஸ்வரியின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது பற்றி, போலீசார் நடத்திய விசாரணையில், நிறைய உடல்நல குறைவு பிரச்சனைகள் இருந்ததால், கடும் மன அழுத்தத்தில் உமா மகேஸ்வரி இருந்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இது தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உமா மகேஸ்வரி மறைவால், அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். தொடர்ந்து, பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் பிரபலங்களும் உமா மகேஸ்வரி மறைவுக்கு இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
Also Read | "183 மில்லியன் வருசத்துக்கு முன்னாடி.." ஆச்சரிய ஆய்வு.. விஞ்ஞானிகளை மிரள வெச்சுடுச்சு.."

மற்ற செய்திகள்
