"CM தாத்தா.. ப்ளீஸ் HELP பண்ணுங்க".. முதல்வர் ஸ்டாலினுக்கு மழலை மொழியில் சிறுமி வச்ச கோரிக்கை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பள்ளி செல்லும் சிறுமி ஒருவர் தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு மழலை மொழியில் கோரிக்கை வைத்த வீடியோ சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.
இணைய பயன்பாட்டின் அதிகரிப்பு சமூக வலைதளங்களின் வருகையை சாத்தியப்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும். ஒருபக்கம் கேளிக்கைக்காவும் பொழுதுபோக்கிற்காகவும் பல அம்சங்கள் இந்த சமூக வலை தளங்களில் இதன்மூலம் குறிப்பிடத்தக்க அளவில் உதவி தேவைப்படும் மக்களின் குரலும் அந்தந்த அதிகாரிகளுக்கு சென்றுசேர்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
இன்றைய காலத்தில் அனைத்து அரசு துறைகளுக்கும் தனித்தனியாக சமூக வலை தல பக்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் மக்களுக்கு தேவையான அறிவிப்புகளை வெளியிடவும் தேவையான நேரங்களில் மக்களின் குரலை கேட்கவும் அதிகாரிகளால் முடிகிறது. இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே ஒவ்வொருவரும் தங்களது கோரிக்கைகளை சமூக வலை தளங்கள் மூலமாக முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் முக.ஸ்டாலினுக்கு சிவகாசியை சேர்ந்த சிறுமி கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறார்.
சிவகாசியில் ரயில்வே மேம்பாலம் அமைப்பது குறித்து சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர். ரயில்வே மேம்பாலம் இல்லாததன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்பவர்கள் ரயில்வே கேட்டில் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழலும் ஏற்படுகிறது.
Images are subject to © copyright to their respective owners.
இந்த நிலையில் சிறுமி ஒருவர் தங்களது பகுதியில் ரயில்வே கேட் அமைத்து தரும்படியும் தினசரி பள்ளிக்கு செல்லும் போது போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்வதால் தாமதமாகவே வகுப்பிற்கு செல்வதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோ பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.
மழலை மொழி மாறாமல் பேசும் இந்த சிறுமி," CM தாத்தா நான் சிவகாசில இருந்து பேசுறேன். எங்க பகுதியில பாலம் கட்டிக்கொடுங்க தாத்தா. டெய்லி ஸ்கூலுக்கு லேட்டா போறேன். ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க தாத்தா" என கூறியிருக்கிறார்.

மற்ற செய்திகள்
