லாட்டரியில் 20 கோடி ரூபாய் ஜெயிச்சு.. பிரபலமான பெண்.. திடீர்ன்னு பல வருஷம் கழிச்சு எடுத்த பரபர முடிவு!!
முகப்பு > செய்திகள் > உலகம்பொதுவாக ஒருவரது வாழ்வில் லாட்டரியில் பெரும் பரிசுத் தொகை அடிக்கும் சமயத்தில் அவரது வாழ்வே தலைகீழாக மாறி சிறந்த பாதையில் அவர்கள் செல்வது பற்றி ஏராளமான செய்திகளை நாம் கடந்து வந்திருப்போம்.
Images are subject to © copyright to their respective owners
மிக ஏழ்மையான சூழலில் சிலர் சிக்கித் தவிக்கும் போது அவரது வாழ்வில் லாட்டரியில் அதிர்ஷ்டம் அடித்து அதில் கிடைக்கும் பெருந்தொகை மூலம் அவர்களின் வாழ்வும் சிறந்த முறையில் முன்னேறி செல்லும். இப்படி கொஞ்சம் கூட எதிர்பாராத நேரத்தில் பலரது வாழ்வில் அதிர்ஷ்டம் அடிக்கும் சூழலில், தற்போது லாட்டரி அடித்த பெண் ஒருவரது வாழ்வில் நடந்த துயரம் தொடர்பான செய்தி அதிகம் வைரல் ஆகி வருகிறது.
தற்போது 34 வயதாகும் Callie Rogers என்ற பெண் ஒருவர், கடந்த 2004 ஆம் ஆண்டு தனக்கு பதினாறு வயதாக இருக்கும் சமயத்தில் லாட்டரியில் சுமார் இரண்டு மில்லியன் பவுண்டுகள் தொகையை பரிசாக வென்றுள்ளார். இது இந்திய மதிப்பில் சுமார் 20 கோடி ரூபாய் ஆகும். இளம் வயதிலேயே இப்படி ஒரு தொகை வென்றதால் நிச்சயம் அவரது வாழ்வு சிறந்த முறையில் பயணித்திருக்கும் என்று தான் பலரும் கருதி இருப்பார்கள்.
ஆனால், Callie வாழ்வில் அப்படியே நேர்மாறான விஷயங்கள் அரங்கேறி உள்ளது. முன்னதாக, மணிக்கு 3.60 பவுண்டு ஊதியத்தில் Callie பணியாற்றி வந்துள்ளார். அந்த காலகட்டத்தில் தான் சுமார் 2 மில்லியன் பவுண்டுகள் தொகையை பரிசாக அவர் லாட்டரியில் வென்றிருந்ததாக தகவல்கள் கூறுகின்றது.
Images are subject to © copyright to their respective owners
இத்தனை ஆண்டுகளில் திருமணம் முடிந்து நான்கு பிள்ளைகளுக்கு தாயாராகவும் இருக்கும் Callie Rogers, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விபத்து ஒன்றில் சிக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே போல, முன்பு ஒரு முறை இரண்டு பெண்களால் வாக்குவாதம் ஒன்றில் தாக்கப்பட்ட Callie, எலும்புகள் நொறுங்கி, நிரந்தரமான பார்வை குறைபாடு பெறவும் செய்ததாக சொல்லப்படுகிறது.
அதே போல, தனக்கு கிடைத்த பணத்தை கொண்டு அறுவை சிகிச்சை, விருந்து, உடைகள், நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் பரிசுகள், விருந்துகள் என கொடுத்து அனைத்து பணத்தையும் அவர் வீணடித்துள்ளார். இப்படியாக லாட்டரியில் பணம் ஜெயித்த பிறகு ஒன்றுமில்லாத நிலைக்கு தள்ளப்பட, தற்போது நர்சிங் படிப்பில் Callie இணைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
Images are subject to © copyright to their respective owners
மேலும் 16 வயதிலேயே தனது கையில் ;பெருந்தொகை பரிசாக கிடைத்து வாழ்க்கை இப்படி மாறியதால், லாட்டரி வெற்றியாளருக்கு வயது வரம்பு வைக்கும்படி கோரிக்கை ஒன்றையும் Callie Rogers வலியுறுத்தி உள்ளார்.