“திரும்பவும் புருஷன் கிட்டயே போறியா?”.. பைக்கில் போகும்போது இளம்பெண்ணை அடித்தே கொன்ற காதலன்.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By K Sivasankar | Jan 05, 2023 08:09 PM

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் 35 வயது மதிக்கத்தக்கவர் பாகுல். இவரது மனைவி சுகன்யா சுமார் 32 வயது மதிக்கத்தக்கவர்.

Married Woman killed by Boyfriend Coimbatore Tamilnadu

Also Read | “பெண்களை அப்படி காட்டுறோமா?.. சீரியலை நிறுத்த சொல்லிட்டாங்க!” ─ ‘எதிர்நீச்சல்’ இயக்குநர் Exclusive

இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகள், 12 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில் சுகன்யாவுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோவை கருமத்தம்பட்டியை சேர்ந்த எலக்ட்ரீசியன் சரவணக்குமாருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் நாளடைவில் சுகன்யா தனது கணவர் மற்றும் மகன், மகளை பிரிந்து சரவணக்குமாருடன் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அதன் பின்னர் கருமத்தம்பட்டி ராயர் பாளையம் பகுதியில் சரவணக்குமாருடன் சுகன்யா வசித்து வந்த நிலையில், சுகன்யாவுக்கும் சரவணக்குமாருக்கும் இடைடே சண்டை ஏற்பட, அங்கிருந்து வெளியேறி உறவினர் வீட்டுக்கு செல்வதாக சொல்லிவிட்டு சுகன்யா புறப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதிலும், சரவணக்குமாரே சுகன்யாவை கொண்டு சென்றுவிடுவதாக கூறி, மோட்டார் சைக்கிளில் சுகன்யாவை ஏற்றி அழைத்துச்சென்றுள்ளார்.   ஆனால் தெக்கலூர் பேருந்து நிறுத்தம் அருகே போகும்போது உண்டான வாக்குவாதத்தால், ஏற்பட்ட தகராறில் இரும்பு கம்பியால் சுகன்யாவை சரவணக்குமார் அடித்தே கொன்றுவிட்டு அருகில் இருந்த குப்பைக்கிடங்கில் வீசிவிட்டு தப்பி ஓடினார்.

இது தொடர்பாக அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து, திண்டுக்கல் பகுதியில் பதுங்கி இருந்த சரவணக்குமாரை கைது செய்து விசாரித்தனர். அப்போது சுகன்யா, தன்னுடனான சண்டையில் தன் முதல் கணவரிடமே செல்லப்போவதாக சொல்லிவிட்டு, போனதால் ஆத்திரம் அடைந்து அவரை கொன்றுவிட்டதாக சரவணக்குமார் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து சரவணக்குமாரை போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Also Read | Ethirneechal : "அந்த Scene-அ எழுதுனது நான்.. நடிகர்ட்ட ஏன் கேக்குறாங்க" ─ சர்ச்சை காட்சிகள் குறித்து‘எதிர்நீச்சல்’ இயக்குநர் Exclusive

Tags : #POLICE #TAMILNADU

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Married Woman killed by Boyfriend Coimbatore Tamilnadu | Tamil Nadu News.