‘அடிச்ச புயலுக்கு இவ்வளவும் கரை ஒதுங்கிருக்கு’.. ‘மருத்துவக் குணம் வேற இருக்காம்’.. மூட்டை மூட்டையாய் அள்ளிச் சென்ற மக்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நிவர் புயலால் பரங்கிப்பேட்டை அருகே கடற்கரையில் ஒதுங்கிய மட்டிகளை பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அள்ளிச் சென்றனர்.

நிவர் புயல் காரணமாக கடலூர் மாவட்டம் முழுவதும் நேற்று பலத்த சூறைக் காற்றுடன் மழை பெய்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்கரை கிராமங்களான பரங்கிப்பேட்டை, சின்னூர், சாமியார்பேட்டை, புதுக்குப்பம், உள்ளிட்ட பகுதி மக்கள் புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் மழை சற்று குறைந்த நிலையில் பரங்கிப்பேட்டை அருகே உள்ள சி.புதுப்பேட்டை கடற்கரைப் பகுதியில் ஏராளமான மட்டிகள் (கடல் சிப்பி) குவிந்து கிடந்தன. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனே கடற்கரைப் பகுதிக்குச் சென்று சாக்கு மூட்டைகளிலும், பைகளிலும் மட்டிகளை அள்ளிச் சென்றனர். பெண்கள் பலர் நடந்தே சென்று பைகள் மற்றும் கூடைகளில் மட்டியை அள்ளிச் சென்றனர். இந்த மட்டி மருத்துவக் குணம் கொண்டது என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள், நிவர் புயல் காரணமாக கடந்த 3 நாட்களாகக் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் காற்றும், மழையும் பெய்ததால் கடலில் இருந்து மட்டிகள் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
