'சாலையின் நடுவே இருந்த கான்கீரிட் டிவைடர்'... 'திக் திக் நிமிடங்கள்'... ஆனா நான் சிங்கம் என மீண்டும் நிரூபித்த டாடா ஹாரியர்!
முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய கார்களின் வலுவான கட்டுமானம் அதன் தரத்தை எடுத்துக்காட்டுவதோடு, பயணிகளின் பாதுகாப்பையும் மேம்பட்டதாக மாற்றியுள்ளது என்பதை உணர்த்தும் வகையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
புது டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் கீழே உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த டாடா ஹாரியர் கார் திடீரென சாலையின் நடுவே இருந்த கான்கீரிட் டிவைடரில் எதிர்பாராத விதமாக மோதியது. மோதிய வேகத்தில் காரின் உள்ளே இருந்தவர்களுக்குக் கடுமையான காயம் ஏற்பட்டிருக்கலாம் எனப் பலரும் அஞ்சிய நிலையில், காரின் உள்ளே இருந்த யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
இதன் மூலம் டாடா ஹாரியர் காரின் வலுவான கட்டுமான தரம் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. எஸ்யூவி ரக காரான டாடா ஹாரியர், இதுபோன்று பல சந்தர்ப்பங்களில் பயணிகளுக்குச் சிறு காயமும் ஏற்படாமல் தடுத்துள்ளது. இந்தியச் சந்தையில் தற்போது டாடா கார்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணமாக இருப்பது, அதன் உறுதியான வடிவமைப்பும், பாதுகாப்பு அம்சங்களும்.
அதே போன்று இந்தியச் சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் டாடா நெக்ஸான் கார், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில், 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை முழுமையாக பெற்ற முதல் 'மேட் இன் இந்தியா' கார் என்ற புதிய வரலாற்றை உருவாக்கியது. இதன் மூலம் சர்வதேச அரங்கில் டாடா நெக்ஸான் இந்தியாவிற்கு மிகப்பெரிய கௌரவத்தைத் தேடிக் கொடுத்தது.
பாதுகாப்பு என்ற அம்சத்திற்கு டாடா முன்னிலை வருவது இந்திய வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு தொடர்பான விசயத்தில் டாடா அதிக அக்கறை எடுத்துள்ளதாக ஆட்டோ மொபைல் துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.