'காணாமல் போன மளிகைக் கடைகாரர்!'.. 'கோவில் வளாகத்தில்' தோண்டியபோது தெரியவந்த 'ஷாக்'!.. 'ஜோதிடர்' செய்த குலைநடுங்கும் காரியம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கடந்த 12ம் தேதி மளிகை கடை ஊழியர் கண்ணதாசன் திடீரென காணாமல் போனார்.

இதனை அடுத்து லிங்கா ரெட்டி பாளையத்தில் உள்ள கோவில் வளாகத்தில் ஒருவருடைய சடலம் ஒன்று புதைந்து இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். விசாரித்ததில் மளிகை கடை ஊழியர் கண்ணதாசனை ஜோதிடர் கோபிநாத் என்பவர் கொன்று புதைத்தாக போலீசார் அவரை கைது செய்தனர்.
பின்னர் ஜோதிடர் கோபிநாத்தின் நண்பர் திருப்பதி, கண்ணதாசனின் கள்ளக்காதலி மஞ்சுளா உள்ளிட்டோரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வரும் நிலையில் மளிகை கடை ஊழியர் கண்ணதாசன் குறித்து மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜோதிடர் ஒருவர் கோவில் வளாகத்தில் வைத்து மளிகைக்கடைக் காரர் ஒருவரை கொன்று புதைத்தது கடலூரில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
