‘நிவர் புயல் கரையை கடந்தாலும்’... ‘இந்த 4 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும்’... ‘வானிலை ஆய்வு மையம் தகவல்’...!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நிவர் புயல் கரையை கடந்துவிட்ட நிலையிலும், 4 மாவட்டங்களில் கனமழையும், பலத்த காற்றும் நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலின் தெற்குப் பகுதியில் உண்டான நிவர் புயல் நேற்றிரவு 11.30 மணி முதல் இன்று அதிகாலை 2.30 வரை முழுவதுமாக கரையை கடந்துவிட்டது. அது அதிதீவிரப் புயலாக கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வலுவிழந்து தீவிரப் புயலாகவே கரையைக் கடந்தது. புயல் கரையை கடந்த நேரத்தில் புதுச்சேரி உள்பட சில பகுதிகளில் மணிக்கு 120 முதல் 140 கி.மீ. வரையில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
இதனை தொடர்ந்து, நிவர் புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து சென்றது. தற்போது நிலப்பரப்புக்குள் நகர்ந்து வரும் நிவர் புயல் படிப்படியாக வலுவிழந்து வருகிறது. இந்நிலையில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் அதிக கனமழையும், பலத்த காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் திருச்சி, நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, சேலம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
