வெளுத்து வாங்கும் ‘கனமழை’.. நிவர் புயல் எங்கே கரையை கடக்கும்..? தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நிவர் புயலின் நிலவரம் குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், ‘நிவர் புயலானது சரியாக எங்கே கடக்கும் என உறுதியாக சொல்லமுடியவில்லை. ஐரோப்பா, பிரிட்டிஷ் மற்றும் ஜெர்மனிய வானிலை ஆய்வு மையங்களின் தகவலின்படி, புதுச்சேரிக்கும் சென்னைக்கும் இடையே மகாபலிபுரம் அருகே கரையை கடக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் வட அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் வானிலை மையங்கள் காரைக்கால்-பரங்கிப்பேட்டை அருகே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளன. என்னுடைய கணிப்பின்படி இந்த புயல் வலுவிழந்தால் அது டெல்டா பக்கம் திரும்பலாம். ஆனால் இது தீவிரமாக இருப்பதால் டெல்டா பக்கம் திரும்ப வாய்ப்பு இல்லை. அதனால் டெல்டாவிற்கு மழை இருக்குமே தவிர புயல் இருக்காது.
அதனால் சில கணிப்புகளின்படி நிவர் புயல், புதுச்சேரிக்கும் சென்னைக்கும் இடையே மகாபலிபுரம்-கல்பாக்கம் இடையே கரையைக் கடக்கத்தான் வாய்ப்பு உள்ளது. இது இன்று இரவு அல்லது நாளை காலை கரையை கடக்கலாம். மகாபலிபுரத்துக்கும் சென்னைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இல்லை என்பதால் சிறுது மாற்றம் என்றாலும் இந்த புயல் சென்னையில் கரையைக் கடக்கலாம்’ என அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
