அச்சுறுத்தும் நிவர்!.. வெளிமாவட்ட மக்களுக்கு 'நோ என்ட்ரி' போட்ட சென்னை காவல்துறை!.. பிரதான சாலைகள் மூடல்!.. அதிரடி அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னைக்குள் வெளிமாவட்ட மக்கள் இரவு 10 மணிக்கு மேல் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான அதி தீவிர நிவர் புயல் இன்று இரவு கரையைக் கடக்கிறது.
இதன் காரணமாக, வெளிமாவட்ட மக்கள் இரவு 10 மணிக்கு மேல் சென்னைக்குள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மறு அறிவிப்பு வரும் வரை சென்னையின் பிரதான சாலைகள் மூடப்பட்டிருக்கும் எனவும், மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும், சென்னை மாநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
அந்த வகையில், சென்னை மெரினா காமராஜர், தலைமைச் செயலகம் இராஜாஜி சாலை, நேப்பியர் பாலத்தை ஒட்டிச் செல்லும் விவேகானந்தர் சாலை, அடையாறு பாலம், திருவான்மியூரிலிருந்து செல்லும் இ.சி.ஆர். சாலை, ஓ.எம்.ஆர் சாலை உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு, போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டிருப்பதுடன், ஆம்புலன்ஸ், பேரிடர் மீட்பு பணிக்குழுவினர், காய்கறி, பால் வண்டி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

மற்ற செய்திகள்
