இந்த மாதிரி ‘இடத்துல’ எல்லாம் இறங்காதீங்க..! பாதுகாப்பு தான் முக்கியம்.. காவல்துறை அறிவுறுத்தல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நிவர் புயல் காரணமாக மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
நிவர் புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை அதி தீவிர புயலாக கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாமல்லபுரத்திற்கும், காரைக்காலுக்கும் இடையே புயல் கரையை கடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி, காரைக்கால், மாமல்லபுரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
கடலூரில் கிட்டத்தட்ட 3000-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். புயலால் ஏற்படும் மின் சேதங்களை சரிசெய்ய 3054 மின் ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். 8 ஆயிரம் மின்கம்பங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பேரிடர் மீட்புக்குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.
இந்த நிலையில் தொடர் மழை பெய்து வருவதால், தேங்கிய நீரில் இறங்க வேண்டாம் என்றும் அத்தியாவசிய தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
உங்களின் பாதுகாப்பிற்காக
அத்தியாவசிய பணி ஊழியர்களுடன்
நாங்களும் களத்தில் உள்ளோம். pic.twitter.com/w1w35ECLvF
— Tamil Nadu Police (@tnpoliceoffl) November 25, 2020
நம் பாதுகாப்பு நம்மிடம்
மழைகாலங்களில் வெளியே செல்வதை தவிர்ப்பீர். pic.twitter.com/6WLvBkTWGu
— Tamil Nadu Police (@tnpoliceoffl) November 25, 2020
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சேவைகள் பொதுமக்கள் எளிதில் பெறவும்¸ தீ¸ விபத்து¸ ஆழ்துளைக் கிணறு விபத்து¸ வனவிலங்கு மீட்பு¸ ரசாயனம் மற்றும் விஷவாயுக் கசிவு உள்ளிட்ட அவசர உதவிகளுக்கு இத்துறையை மக்கள் எளிதில் அணுகிடவும் தீ செயலி அறிமுகம். pic.twitter.com/LDDXeRNCFM
— Tamil Nadu Police (@tnpoliceoffl) November 25, 2020