புயலுக்கு ‘கேதர் ஜாதவ்’னு பேர் வச்சிருந்தா..! ‘ஒரு படத்த வச்சி இப்டி பின்ரீங்களேப்பா’.. நடிகர் விவேக் ‘கலக்கல்’ ட்வீட்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சிஎஸ்கே கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவை நிவர் புயலுடன் ஒப்பிட்டு வந்த மீம்ஸ் ஒன்றை நகைச்சுவை நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல், இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காரைக்கால்-மாமல்லபுரம் இடைப்பட்ட பகுதியில் நாளை (வியாழக்கிழமை) அதிகாலை புயல் கரையை கடக்கக் கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது 120 முதல் 130 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்றும், சில சமயங்களில் 155 கிலோ மீட்டர் வரையும் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
புயல் ஒருபுறம் இருக்க, அதை வைத்து பலரும் மீம்ஸ்கள் உருவாக்கி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் ஒரு கடற்கரையில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் செம வைரலானது. இந்த நிலையில் ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் ‘புதுசா வர்ற புயலுக்கு கேதர் ஜாதவ்னு பேர் வச்சிருந்தா அடிக்காமலே போயிருக்கும்’ என நடிகர் விவேக் படத்துடன் பதிவிட்டிருந்தார்.
எப்பவோ நடிச்ச ஒரு காமெடி சீனின் ஒரு படத்த வச்சி இப்டி பின்ரீங்களேப்பா!! ஐடியா உள்ள பசங்க!! https://t.co/KQ1V0dtxhl
— Vivekh actor (@Actor_Vivek) November 25, 2020
இதனை தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘எப்பவோ நடிச்ச ஒரு காமெடி சீனின் ஒரு படத்த வச்சி இப்டி பின்ரீங்களேப்பா. ஐடியா உள்ள பசங்க’ என நகைச்சுவை நடிகர் விவேக் பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
