‘இப்டிதான் நிலவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டர்’.. பிரமிக்க வைத்த இஸ்ரோ வெளியிட்ட வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Sep 06, 2019 02:52 PM

சந்திராயன் -2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் கருவியானது நள்ளிரவு 1:30 முதல் 2:30 மணிக்குள் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

WATCH: The soft landing of Chandrayaan 2 Vikram lander

கடந்த ஜூலை மாதம் இஸ்ரோ சார்பில் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திராயன் -2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இதனை அடுத்து புவி சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்ட விண்கலம், படிப்படியாக புவி வட்டப்பாதையில் 5 முறை உயர்த்தப்பட்டது. இதனை அடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 14 -ம் தேதி சந்திராயன் -2  விண்கலம் புவி வட்டப்பாதையில் இருந்து பிரிந்து நிலவை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 20 -ம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதையை சந்திராயன் -2 அடைந்தது. இதன்பின்னர் கடந்த 2 -ம் தேதி விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.

இந்நிலையில் இன்று(06.09.2019) நள்ளிரவு 1:30 மணி முதல் 2:30 மணிக்குள் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அதிகாலை 5:30 மணி முதல் 6:30 மணிக்குள் பிரக்யான் ரோவர் விக்ரம் லேண்டரில் இருந்து வெளியே வந்து ஆய்வை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் மாதிரி வீடியோ ஒன்றை இஸ்ரோ தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Tags : #CHANDRAYAAN2 #MOONMISSION #ISRO #VIKRAMLANDER #CHANDRAYAAN2LIVE #CHANDRAYAAN2LANDING