மகளோட கல்யாணத்துல பந்தயம் கட்டிய பெற்றோர்.. விஷயம் தெரிஞ்சு கடுப்பான மணமகள்.. அதுவும் எதுல பெட் கட்டிருக்காங்கன்னு பாருங்க..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதன்னுடைய திருமணத்தில் பெற்றோர் பந்தயம் கட்டியதை அறிந்து, திருமணத்தையே நிறுத்த இருப்பதாக சொல்லியிருக்கிறார் ஒரு இளம்பெண்.
பொதுவாகவே திருமணம் வாழ்வின் மிக முக்கிய அங்கமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், திருமணங்களில் பலவிதமான குழப்பங்கள் ஏற்படுவதை நாம் அறிந்திருப்போம். ஆனால், ஒரு இளம்பெண்ணுக்கு வித்தியாசமான சோதனை ஏற்பட்டிருக்கிறது. இதனால் தனது திருமணத்தை நிறுத்த இருப்பதாக கூறியுள்ளார் அவர்.
பந்தயம்
பிரபல சமூக வலை தளமான ரெட்டிட் (Reddit) -ல் அவர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சிகர சம்பவம் குறித்து பகிர்ந்திருக்கிறார் ஒரு இளம்பெண். இது நெட்டிசன்களையே திகைப்படைய செய்திருக்கிறது. அந்த பெண்ணுடைய பெற்றோர் வித்தியாசமான பந்தயத்தை கட்டியிருக்கிறார்கள். இது அந்த இளம்பெண்ணுக்கு தெரியவரவே அவர் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்.
இந்த திருமணம் எவ்வளவு காலம் நீடிக்கும்? என்பதில் தனது பெற்றோர் பந்தயம் கட்டியதாக குறிப்பிட்டுள்ளார் அந்த பெண். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில்,"என்னுடைய திருமணம் இந்த மாத இறுதியில் நடைபெற இருக்கிறது. ஆனால், நான் அதனை நிறுத்த திட்டமிட்டிருக்கிறேன். எளிமையான முறையில் பதிவு திருணம் செய்துகொள்ள முடிவெடுத்திருக்கிறேன். இதற்கு காரணம் என்னுடைய பெற்றோர் கட்டியிருந்த பந்தயம் தான். இதுபற்றி என்னுடைய உறவினர் ஒருவர் என்னிடத்தில் கூறினார். அதாவது என்னுடைய திருமணம் எவ்வளவு நாட்கள் நீடிக்கும் எனவும் என்னுடைய வருங்கால கணவர் நான் சிறந்த மனைவி இல்லை என்பதை எவ்வளவு நாளில் உணர்வார்? என்றும் பெற்றோர் பந்தயம் கட்டியிருக்கிறார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
நகைச்சுவை
இதுபற்றி தனது பெற்றோரிடம் அவர் கேட்டிருக்கிறார். அதற்கு விளையாட்டாக இவ்வாறு செய்ததாக கூறியுள்ளனர். இதுபற்றி அவர் தனது பதிவில்," பொதுவாக ஆண்கள் தனக்கு வரப்போகும் மனைவி தனக்கு கீழ்ப்படிய வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் நீ அப்படியான பெண் இல்லை என பெற்றோர்கள் என்னிடம் கூறினார்கள். இது எனது கவலையை அதிகரித்தது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து தனது திருமணத்தை நிறுத்திவிட்டு எளிமையான முறையில் பதிவு திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருப்பதாக தனது பெற்றோரிடம் கூறியுள்ளார் அந்த பெண். இதுபற்றி அவர்,"எனது பெற்றோர் திருமணத்தை ரத்து செய்ய வேண்டாம் என்று என்னிடம் கூறுகிறார்கள். இதனால் நான் நீண்ட காலத்திற்கு வருந்துவேன். இப்போது அதை ரத்து செய்வது எங்கள் குடும்பத்திற்கும் எனக்கும் சங்கடமாக இருக்கும். ஆனால் நான் பின்வாங்கப்போவதில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.