மனைவியுடன் தியேட்டருக்கு போன புது மாப்பிள்ளை.. கொஞ்ச நேரத்துல கேட்ட பயங்கர சத்தம்..போலீஸ் விசாரணைல வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபீஹார் மாநிலத்தில் திருமணமான கொஞ்ச நாளில் மணமகன் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீஹார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவை சேர்ந்தவர் அங்கித். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் நண்பர்களாக பழகிவந்த நிலையில் நாளடைவில் இது காதலாக மலர்ந்திருக்கிறது. இதனிடையே இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருக்கின்றனர். இதுகுறித்து அந்த இளம்பெண் தனது தந்தை தாப்பு சிங்கிடம் தெரிவிக்கவே, அவர் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
திருமணம்
இதனையடுத்து தனது பெற்றோரின் விருப்பத்தையும் மீறி, அங்கித்தை திருணம் செய்திருக்கிறார் அந்த பெண். இருவரும் அதே பகுதியில் வசித்து வந்திருக்கின்றனர். இதனிடையே அங்கித்தை தாக்க நினைத்திருக்கிறார் அவரது மாமனார் ஆன தாப்பு சிங். இதனையடுத்து, உள்ளூரை சேர்ந்த 4 பேர்கொண்ட கும்பலை சந்தித்து, அங்கித்தை கொலை செய்யும்படி சிங் கூறியதாக தெரிகிறது.
இதனிடையே, சமீபத்தில் தியேட்டருக்கு தனது மனைவியுடன் சென்றிருக்கிறார் அங்கித். அங்கு அடையாளம் தெரியாத சிலர் அவரை கடுமையாக தாக்கியிருக்கின்றனர். இதனால் அங்கேயே மயங்கிவிழுந்திருக்கிறார். இதனையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். ஆனால், அவர் முன்னரே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.
விசாரணை
இந்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று அங்கித்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும், இது தொடர்பாக விசாரணையில் இறங்கிய போலீசார் இரண்டு பேரை கைது செய்திருக்கின்றனர். அவர்கள் உண்மையை ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். மேலும், அங்கித்தை கொலை செய்ய அவரது மாமனார் தாப்பு சிங்கிடம் 4 லட்ச ருபாய் பேரம் பேசியதாகவும் முன்பணமாக 60,000 ரூபாயை பெற்றதாகவும் கைது செய்யப்பட்ட இருவரும் தெரிவித்திருக்கின்றனர்.
இதனை தொடர்ந்து தாப்பு சிங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், தப்பியோடிய இரண்டு பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பீஹார் மாநிலத்தில் மருமகனை மாமனாரே திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

மற்ற செய்திகள்
