விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொன்ன டேவிட் வார்னர்.. "அவர் ஷேர் பண்ண ஃபோட்டோ தான் செம!!"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான டேவிட் வார்னருக்கு இந்திய அளவிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இதற்கு மிக முக்கிய காரணம், இந்திய திரைப்படங்கள் தொடர்பாக ரீல்ஸ் வீடியோக்களை வார்னர் அதிகம் பகிர்வது தான்.
ஐபிஎல் தொடரில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக டேவிட் வார்னர் ஆட ஆரம்பித்த பிறகு, தெலுங்கு உள்ளிட்ட இந்திய திரைப்பட பாடல்கள் தொடர்பாக டிக்டாக் வீடியோக்களை தனது குடும்பத்தினருடன் சேர்ந்து நடனமாடி வெளியிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, ரஜினியின் தர்பார், எந்திரன் உள்ளிட்ட பாடல்களுக்கும், விஜய்யின் தெறி படத்தில் வரும் பாடலுக்கும் Face App மூலம், தனது முகத்தை மாற்றி வைத்து டேவிட் வார்னர் வெளியிட்டிருந்த வீடியோக்கள், தென் இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வைரலாகி இருந்தது.
இது தவிர, ஹ்ரித்திக் ரோஷன், ஷாருக்கான், குறிப்பாக அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி இருந்த புஷ்பா படம் தொடர்பாக வார்னர் வெளியிட்டிருந்த ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் Face App வீடியோக்கள், பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்திருந்தது. ரசிகர்கள் பலரும் வார்னரின் ரீல்ஸ் வீடியோக்களில், இந்திய திரைப்படங்களிலும் நடிக்கும் படியும் அவருக்கு கோரிக்கையை வைத்து வந்தனர்.
தொடர்ந்து, இந்தியாவிற்கு நெருக்கமாக வார்னர் நிறைய பதிவுகளை பகிர்ந்து வரும் நிலையில், இன்று (31.082022) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கணபதியை தான் வணங்குவது போல புகைப்படம் ஒன்றையும் டேவிட் வார்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தனது கேப்ஷனில், "என்னுடைய அனைத்து நண்பர்களுக்கு விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள். உங்களுக்கு நிறைய மகிழ்ச்சியும், சந்தோஷமும் கிடைக்க வேண்டும் என நான் விரும்பி கொள்கிறேன்" என டேவிட் வார்னர் குறிப்பிட்டுள்ளார். விநாயகர் சதுர்த்தி தினத்தில், டேவிட் வார்னர் வாழ்த்தியது தொடர்பான இன்ஸ்டா பதிவு, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
