"கே எல் ராகுல் கல்யாணம் எப்போ?".. நடிகர் சுனில் ஷெட்டி பகிர்ந்த விஷயம்??.. வெளியான அதிரடி தகவல்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Aug 25, 2022 11:52 PM

இந்திய கிரிக்கெட் அணி, சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை 3 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தி இருந்தது.

Suniel shetty about kl rahul marriage sources

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டிருந்ததால், இந்திய அணியை கே எல் ராகுல் கேப்டனாக இருந்து வழிநடத்தி இருந்தார்.

ஜிம்பாப்வே தொடர் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆசிய கோப்பையை தான் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள், ஒரே க்ரூப்பில் இடம்பெற்றுள்ளது. மேலும், தங்களின் முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்தியா சந்திக்க இருப்பதால், ரசிகர்கள் அனைவரும் இந்த போட்டியைக் காண மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

இதனிடையே, இந்திய அணி வீரரான கே எல் ராகுல் திருமணம் குறித்து சிறப்பான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இந்திய அணியின் தொடக்க வீரரான கே எல் ராகுல், நடிகையான அதியா ஷெட்டியுடன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காதலில் இருந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆரம்பத்தில், ஒரு ஊகமாக இந்த விஷயம் பரவி வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு இந்த விஷயம் ஏறக்குறைய உறுதியாகி வகையில் இருவரும் சில பதிவுகளை பகிர்ந்திருந்தனர்.

Suniel shetty about kl rahul marriage sources

சமீபத்தில், அறுவை சிகிச்சை ஒன்றை ராகுல் மேற்கொள்ள வெளிநாடு சென்றிருந்த போது, அதியா ஷெட்டியும் அவருடன் சென்றிருந்தார். இது தொடர்பான புகைப்படங்களையும் அவர் பகிர்ந்திருந்தார். பிரபல பாலிவுட் நடிகரான சுனில் ஷெட்டியின் மகள் தான் அதியா ஷெட்டி. தனது மகள் மற்றும் கிரிக்கெட் வீரர் கே எல் ராகுல் திருமணம் தொடர்பாக சில விஷயத்தை சுனில் ஷெட்டி தற்போது பகிர்ந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Suniel shetty about kl rahul marriage sources

அதன் படி, ஆசிய கோப்பை, உலக கோப்பை, தென்னாபிரிக்க தொடர் என ராகுல் அடுத்தடுத்து பிசியாக இருந்து வருவதாகவும், அவருக்கு ஓய்வு கிடைத்தால் அதன் நடுவே திருமணத்தை நடத்தி விடுவோம் என்றும் சுனில் ஷெட்டி கூறி உள்ளார். ஒரு தந்தையாக விரைவில் தனது மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என விரும்புவதாகவும், ஆனால் ராகுலிற்கு ஒன்றிரண்டு நாட்கள் கேப் கிடைப்பதை பார்க்கும் போது சற்று பயமாக இருப்பதாகவும் சுனில் ஷெட்டி கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Tags : #KLRAHUL #SUNIEL SHETTY #ATHIIYA SHETTY #CRICKET #MARRIAGE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Suniel shetty about kl rahul marriage sources | India News.