மேடை'ய சுத்தி வரப்போ.. திடீர்'ன்னு மணப்பெண் எடுத்த முடிவு.. அதிர்ந்து போன மாப்பிள்ளை

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Jul 08, 2022 08:14 PM

சமீப காலமாகவே, திருமண மேடையில் வைத்து நிகழும் ஏராளமான நிகழ்வுகளை நாம் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களாக அதிகம் பார்த்து வருகிறோம்.

up bride calls off wedding says groom is too dark

Also Read | திடீர்'ன்னு கேட்ட பயங்கர சத்தம்.. இரும்பு பாத்திரத்தில் காத்திருந்த அதிர்ச்சி.. குலை நடுங்க வைத்த சம்பவம்.. அதிர்ந்த கேரளா

திருமணம் நடக்க இருந்த நேரத்தில், மாப்பிள்ளையை அறைந்து விட்டு மணப்பெண் மேடையில் இருந்து வெளியேறிய நிகழ்வும், திருமண மேடைக்கு மாப்பிள்ளை நண்பர்களுடன் குடித்து விட்டு வந்ததால் பரபரப்பான திருமண மண்டபம் என சமீபத்திய காலத்தில் திருமண மேடையிலேயே நிறைய எதிர்பாராத சம்பவங்கள் நடந்து வருகிறது.

அந்த வகையில், தற்போது திருமண மேடை ஒன்றில் நடைபெற்ற சம்பவம் ஒன்று, இணையத்தில் அதிகம் வைரலாகி, நெட்டிசன்கள் மத்தியில் பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், எட்டாவா என்னும் பகுதியில் வைத்து நீட்டா மற்றும் ரவி ஆகியோருக்கு திருமணம் நடைபெறுவதாக பெற்றோர்கள் நிச்சயத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, திருமண தினத்தில் மணமக்கள் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். இதன் பின்னர் திருமண சடங்குகள் தொடங்கிய சமயத்தில் தான், பிரச்சனை தொடங்கி உள்ளது. திருமண நிகழ்வு நடந்து கொண்டிருந்த போது, மணமக்களான இருவரும் மேடையை சுற்றி வந்துள்ளனர். அப்போது தான், திடீரென மணப்பெண் ட்விஸ்ட் வைத்துள்ளார். இரண்டு முறை மேடையை சுற்றி வந்ததும், திருமணம் வேண்டாம் என மணப்பெண் முடிவு செய்துள்ளார்.

up bride calls off wedding says groom is too dark

திருமணத்திற்கு முன்னர் காட்டிய மணமகனும், தற்போது நிற்கும் மணமகனும் வேறு ஒருவர் என்றும், இவர் அதிகம் கருப்பாக இருப்பதாக திருமணம் வேண்டாம் எனக்கூறி, மண்டபத்தில் இருந்தே அவர் வெளியேறி சென்றுள்ளார். மணப்பெண்ணின் குடும்பத்தினர் எவ்வளவோ வற்புறுத்தியும் பெண் கேட்கவில்லை என கூறப்படுகிறது.

இதற்காக, சுமார் ஆறு மணி நேரத்தை அவர்கள் எடுத்து கொண்டு, பெண்ணை கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லவும் அவர்கள் முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் அந்த பெண் சம்மதம் சொல்லவில்லை.

இது தொடர்பாக, மணமகனின் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. தாங்கள் கொடுத்த நகை மற்றும் பணம் உள்ளிட்டவற்றை திருப்பி தர வேண்டி, புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

அதே போல, மணப்பெண் திருமணத்தை நிறுத்தியதால், தான் அதிகம் பாதிக்கப்பட்டதாகவும் மணமகன் ரவி தெரிவித்துள்ளார். பெண்ணின் குடும்பத்தினர் தன்னை பல முறை பார்த்த பிறகும், தற்போது ஏன் இப்படி அவர்கள் நடந்து கொள்கிறார்கள் என்பது தனக்கு புரியவில்லை என்றும், இந்த சம்பவம் தன்னை அதிர்ச்சிக்குள் ஆக்கியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Also Read | பாகுபலி சமோசா-வா? என்ன இப்டி இருக்கு??.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.. சுவாரஸ்ய பின்னணி!!

Tags : #BRIDE #MARRIAGE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Up bride calls off wedding says groom is too dark | India News.