'மன்னிப்பு' கேட்கிறேன்... நான் அந்த 'கட்சிக்கு' செல்லவில்லை... நடிகை குஷ்பூ விளக்கம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ராகுல் காந்தியிடம் மன்னிப்பு கேட்பதாக நடிகை குஷ்பூ தெரிவித்து இருக்கிறார்.
புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இதற்கு நாடு முழுவதும் ஏராளமான பிரபலங்கள் ஆதரவளித்து வருகின்றனர். அந்த வகையில் இதை வரவேற்பதாக தனது ட்விட்டரில் நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பூ தெரிவித்திருந்தார். காங்கிரஸ் கட்சி புதிய கல்விக்கொள்கையை விமர்சனம் செய்த நிலையில், குஷ்பூவின் இந்த கருத்து பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது.
Sanghis can relax, pls do not rejoice. I am not moving to BJP. My opinion might be different from my party but I am an individual with a thinking mind of my own. Yes, #NEP2020 is flayed n flawed at some places, but I still feel we can look at the change with a positivity.. cont..
— KhushbuSundar ❤️ (@khushsundar) July 30, 2020
இந்த நிலையில் தன்னுடைய ட்வீட் குறித்து நடிகை குஷ்பூ விளக்கம் அளித்துள்ளார். அதில், ''புதிய கல்விக்கொள்கையில் தனது நிலைப்பாடு, கட்சியிலிருந்து வேறுபடுகிறது. அதற்காக நான் ராகுல் காந்தியிடம் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் நான் தலையை ஆட்டும் ரோபோ அல்லது கைப்பாவையாக இருப்பதை விட உண்மையை பேசுகிறேன். நான் பாஜகவுக்கு செல்லவில்லை , என் கருத்து கட்சியிலிருந்து வேறுபட்டிருக்கலாம் ஆனால், நான் சொந்த சிந்தனை கொண்ட ஒரு தனிநபர். புதிய கல்விக்கொள்கையில் சில இடங்களில் குறைகள் இருப்பினும், மாற்றத்தை நேர்மறையுடன் பார்க்கிறேன்,'' என தெரிவித்து இருக்கிறார்.