'அப்போ இவரு சீன அதிபர் இல்லையா'... 'கன்பியூஸ் ஆன பாஜகவினர்'... 'மாற்றி எரிக்கப்பட்ட உருவபொம்மை'... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாசீன அதிபர் சீ ஜின்பிங்கின் உருவ பொம்மை என நினைத்து வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உருவ பொம்மை பாஜகவினர் எரித்த சம்பவம் இணையத்தில் கடும் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.

இந்திய-சீன எல்லையில் சீன வீரர்கள் திடீரென நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர், பல ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் சிலர் சீன பொருட்களைப் பயன்படுத்த மாட்டோம் எனக் கூறி, அதனைச் சேதப்படுத்தி புகைப்படங்களைப் பதிவிட்டார்கள்.
இந்நிலையில் சீனாவின் மீதுள்ள கோபத்தில், சீன அதிபர் சீ ஜின்பிங்கின் உருவ பொம்மை என நினைத்து வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உருவப்படத்தை எரித்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள் மேற்கு வங்கத்தின் அசான்சோலைச் சேர்ந்த பாஜக ஆதரவாளர்கள். இது சமூகவலைத்தளங்களில் கடும் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.
தீபிகா படுகோன் நடித்த பத்மாவத் திரைப்படத்தில், ராஜ்புத் சமூகத்தினரை இழிவுபடுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்ட நிலையில், பத்மாவத் திரைப்படம் வெளியான திரைப்பட அரங்கிற்குச் செல்லாமல், அனுஷ்கா ஷெட்டி நடித்த பாகுமதி திரையரங்கிற்குச் சென்று சில அமைப்புகள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
— Lavanya Ballal | ಲಾವಣ್ಯ ಬಲ್ಲಾಳ್ (@LavanyaBallal) June 18, 2020
pic.twitter.com/OlpjHDj1ej

மற்ற செய்திகள்
