“கந்தசஷ்டி கவசம் சர்ச்சை விவகாரம்!” .. “கறுப்பர்கூட்டம்” செந்தில்வாசன் அதிரடி கைது!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக விமர்சித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தை அடுத்து இந்து மதக் கடவுள்களையும் கீழ்த்தரமாக சித்தரிக்கும் அந்த வீடியோ லட்சக்கணக்கான இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தி விட்டதாக இந்து அமைப்பினர் சார்பில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனை அடுத்து கறுப்பர் கூட்டம் சேனலை தடை செய்ய வேண்டும், அதன் நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இந்நிலையில் கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் மன்னிப்பு கேட்டு சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்கியது.
இதனைத் தொடர்ந்து கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் நிர்வாகி சுரேந்திரன் நடராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். இதனிடையே கறுப்பர் கூட்டம் சேனலின் நிர்வாகிகளில் ஒருவரான வேளச்சேரியைச் சேர்ந்த செந்தில்வாசனை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் மீது மத உணர்வுகளை புண்படுத்துதல் தடுப்புச் சட்டத்தின் 153 ஏ உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
