மிஸ்டர் 'விராட் கோலி'... உங்க மனைவியை 'DIVORCE' பண்ணிடுங்க... வழக்குப்பதிவு செய்த 'பாஜக' எம்.எல்.ஏ!
முகப்பு > செய்திகள் > இந்தியாவிராட் கோலி தனது மனைவியான அனுஷ்கா ஷர்மாவை விவாகரத்து செய்ய வேண்டும் என உத்தரபிரதேச மாநில பாஜக எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடெங்கும் நான்காம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சுமார் அறுபது நாளுக்கு மேலாக வணிக வளாகங்கள், தியேட்டர்கள் போன்றவை மூடப்பட்டுள்ளன. இதனால் வீட்டில் முடங்கி கிடைக்கும் மக்கள், பல ஆன்லைன் பிளாட்பார்ம்களில் சினிமாக்கள் மற்றும் பிரபல வெப் சீரியஸ்களை கண்டு பொழுதை கழித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மா தயாரிப்பில் 'பாட்டால் லோக்' என்னும் ஹிந்தி வெப் சீரியஸ் ஒன்று சில தினங்களுக்கு முன்பு வெளியானது. மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ள இந்த வெப் சீரியஸ், உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள பாஜக தலைவர்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனையடுத்து, உத்தரப்பிரதேச மாநிலம் பாஜக எம்.எல்.ஏ நந்த் கிஷோர் குஜ்ஜார் இந்த தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்து அனுஷ்கா ஷர்மா மீது காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், தன்னையும் பாஜக தலைவர் ஒருவரையும் அந்த தொடரில் தவறாக சித்தரித்ததன் பெயரில் அனுஷ்கா ஷர்மாவை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 'தேசிய பாதுகாப்பு சட்டம் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இது போன்ற வெப் சீரியஸ்களை தடை செய்ய வேண்டும். விராட் கோலி தேசப்பற்று மிக்கவர். அதனால் அவர் உடனடியாக அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவை விவாகரத்து செய்ய வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
