"கந்த சஷ்டி கவசம் சர்ச்சை தொடர்பாக".... கறுப்பர் கூட்டம் 'சுரேந்திரன்' சரண்!!!... வெளியான 'லேட்டஸ்ட்' தகவல்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கறுப்பர் கூட்டம் என்னும் யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட சம்பவம், இந்து மத நம்பிக்கையுடைய மக்களிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியது. இந்து மக்களின் உணர்வுகளை நோகடித்ததாக கூறி, இந்து அமைப்பினர் சார்பில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
![kantha sasti kavasham issue karupparkootam surendran surrender kantha sasti kavasham issue karupparkootam surendran surrender](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/kantha-sasti-kavasham-issue-karupparkootam-surendran-surrender-1.jpg)
இந்நிலையில், கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில், பல இந்து சார்பான கட்சிகள் சேனலை தடை செய்து சம்மந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்திருந்தன. இது தொடர்பாக அந்த சேனலின் நிர்வாகிகளில் ஒருவரான செந்தில்வாசன் என்பவரை கைது செய்திருந்தனர்.
இதனை தொடர்ந்து, கருப்பர் கூட்டம் சேனலை சேர்ந்த சுரேந்திரன் என்பவர் புதுச்சேரி போலீசாரிடம் சரணடைந்துள்ளார். அவரை தமிழ்நாடு கொண்டு வர, தமிழக போலீசார் புதுச்சேரி விரைந்துள்ளனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)