‘இந்திய' வீரர்களிடம் 'ஆயுதங்கள் இருந்தன...' அதை 'பயன்படுத்தாததற்கு' இதுதான் 'காரணம்...' 'ராகுல்' கேள்விக்கு 'அமைச்சர் பதில்...'
முகப்பு > செய்திகள் > உலகம்இந்திய வீரர்களை ஆயுதங்கள் இன்றி பேச்சுவார்த்தைக்கு அனுப்பியது யார் என ராகுல்காந்தி எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில் அளித்துள்ளார்.

லடாக் பகுதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15ஆம் தேதி இரவு இந்தியா மற்றும் சீன வீரர்கள் தங்கள் படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் இந்திய ராணுவ தரப்பில் ஒரு அதிகாரி மற்றும் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகின. அதன் பிறகு, இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சீனாவின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, நாடு முழுவதும் சீன பொருட்களுக்க்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக பல்வேறு கேள்விகளை தொடர்ந்து எழுப்பி வரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சீனாவுக்கு தனது கண்டத்தையும் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வீடியோவில், “இந்திய வீரர்களை கொன்று மிகப்பெரிய குற்றத்தை சீனா செய்துள்ளது. ஆயுதங்கள் இன்றி இந்திய வீரர்களை பேச்சுவார்த்தைக்கு அனுப்பியது யார். இந்த நிலைமைக்கு யார் பொறுப்பு” என கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில், இதற்கு விளக்கம் அளித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீனாவுடனான மோதலின் போது இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்தன என்றும் 1996 மற்றும் 2005ஆம் ஆண்டு ஒப்பந்தங்களின்படி, துப்பாக்கி போன்ற ஆயுதங்களை கட்டுப்பாட்டுடன் பயன்படுத்துவதை தவிர்த்து விட்டனர் என்றும் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்
