'முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி'.. சம்மந்தப்பட்ட '30 வருட வழக்கில்'.. பரபரப்பு தண்டனை!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jun 20, 2019 05:57 PM

30 ஆண்டுகளுக்கு முந்தைய சிறைக் கைதியின் மரண வழக்கில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியை குற்றவாளி என அறிவித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பினை வழங்கியுள்ளது.

Gujarats former IPS officer Sanjiv Bhatt Sentenced to life time Jail

1989-ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தின் பின்னணி தற்போது, இந்த தீர்ப்புக்குப் பிறகு வெளிவந்த வண்ணம் உள்ளது. குஜராத் மாநிலம் ஜாம் நகர் மாவட்டத்தில் துணை எஸ்.பியாக சஞ்சீவ் பட் பணியாற்றி வந்தபோது, அம்மாவட்டத்தில் ஒரு பெரும் கலவரம் வெடித்தது. சுமார் 150 பேர் இந்த கலவரத்தில் கைது செய்யப்பட்டதோடு, கைதானவர்களுள் பிரபுதாஸ் வைஷானி என்பவர் தாமதமாக விடுவிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

ஆனால் பிரபுதாஸின் சகோதரர், பின்னர் அளித்த புகாரின் படி, சிறையில் இருந்தபோது, பிரபுதாஸ் வைஷானி மீது, ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் உள்ளிட்டோர் நடத்திய தாக்குதல்தான் காரணம் என்றும், அதனால் அவரைத் தண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. அதனடிப்படையில் பதிவான இந்த வழக்கை 30 ஆண்டுகளுக்கு பின், இன்று விசாரித்த ஜாம்நகர் செஷன்ஸ் நீதிமன்றம், சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பான, தீர்ப்பினை அளித்துள்ளது.

இதனிடையே சஞ்சீவ் பட் கடந்த 2011-ஆம் ஆண்டு அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக, சஸ்பெண்ட் செய்யப்பட்டு, பின்னர் 2015-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பணிநீக்கமும் செய்யப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு தற்போது ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டுள்ளதோடு, இந்த குற்றத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் (அவருடன் பணியாற்றிய)  சக அதிகாரிகள் 6 பேருக்கும், தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #VERDICT #IPS #COURT