'மேட்ச்ல வந்து இப்படியா பண்றது'... 'ரசிகரின் செயலால் அதிர்ச்சி'... வெளியேற்றிய போலீசார்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Jeno | Jul 10, 2019 12:26 PM
உலகக்கோப்பை போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று நடைபெற்ற இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதிப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து வீரர்கள் சொற்ப ரன்களுக்கு தங்களது விக்கெட்டை பறிகொடுத்தார்கள்.
இதையடுத்து 46.1 ஓவரில் மழை குறுக்கிடவே நியூசிலாந்து அணி 211 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போட்டி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததால், போட்டி இன்று நடைபெறும் என நடுவர்கள் அறிவித்தார்கள். இதனிடையே போட்டியின் போது சில சீக்கிய ரசிகர்கள் தனி நாடு (காலிஸ்தான்) வேண்டும் என போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போட்டிக்கு வந்திருந்த சில ரசிகர்கள், பிரிவினையைத் தூண்டும் வகையிலான வசனங்கள் நிறைந்த டி-சர்ட் அணிகளை அணிந்து வந்திருந்தார்கள். ரசிகர்களோடு ரசிகர்களாக அமர்ந்திருந்த அவர்கள் திடீரென தனி நாடு கோரி ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இதையடுத்து அங்கு வந்த பாதுகாப்பு வீரர்கள் போராட்டம் செய்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.