5 லட்சம் கோடி மதிப்புள்ள கம்பெனியின் CEO பதவியை ராஜினாமா செய்த நபர்.. அதுக்கு அவரு சொன்ன காரணம் தான் பலரையும் ஷாக்-ஆக வச்சிருக்கு..!

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Madhavan P | Jun 29, 2022 09:22 PM

இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் ஒன்றின் தலைமை நிர்வாக அதிகாரி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அதற்கு அவர் கூறியுள்ள காரணம் தான் பலரையும் வியப்படைய செய்திருக்கிறது.

CEO quits 68 billion investment firm to sit at the beach

இங்கிலாந்தை சேர்ந்த முதலீட்டு நிறுவனமான ஜூபிட்டர் ஃபண்ட் மேனேஜ்மேண்ட் (Jupiter Fund Management) 68 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடையது. இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தவர் ஆண்ட்ரூ ஃபார்மிகா. இவர் இந்த நிறுவனத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு இணைந்தார். பின்னர் படிப்படியாக உயர்ந்த ஆண்ட்ரூ ஃபார்மிகா, CEO வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், தனது பதவியினை இவர் திடீரென ராஜினாமா செய்திருக்கிறார். முதலீட்டு துறையில் 27 வருட அனுபவத்தை கொண்டவரான ஃபார்மிகா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தது இங்கிலாந்து முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

ராஜினாமா

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"ஆண்ட்ரூ தனது நீண்ட கால திட்டங்களில் ஒன்றான தனது குடும்பத்துடன் தனது சொந்த நாடான ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் குடிபெயர்வதை நிறைவேற்ற இருக்கிறார். ஜூபிட்டர் ஃபண்ட் மேனேஜ்மேண்ட் நிறுவனத்தின் பொறுப்புகளை சரியான நபரிடம் ஒப்படைக்க நேரம் வந்துவிட்டதாக அவர் கருதுகிறார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

CEO quits 68 billion investment firm to sit at the beach

இந்நிலையில், ஜூபிட்டர் ஃபண்ட் மேனேஜ்மேண்ட் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக மேத்திவ் பீஸ்லி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். இவர் அதே நிறுவனத்தில் முதலீட்டு அதிகாரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 51 வயதான ஆண்ட்ரூ ஃபார்மிகா வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முறைப்படி தனது பணியில் இருந்து விலகுவார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதுவும் செய்யாமல் இருக்கவேண்டும்

இந்நிலையில் இதுகுறித்து பேசிய ஆண்ட்ரூ ஃபார்மிகா," நான் எனது சொந்த நாடான ஆஸ்திரேலியாவிற்கு மீண்டும் எனது குடும்பத்துடன் செல்ல இருக்கிறேன். கடற்கரையில் ஏதும் செய்யாமல் அமர்ந்திருக்க விரும்புகிறேன். நிறுவனத்தில் என்னுடன் பணியாற்றிய அனைத்து பணியாளர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் நாங்கள் திட்டமிட்டு சரியான பாதையில் பயணித்திருக்கிறோம். இந்நிறுவனத்தில் முக்கிய பொறுப்பு வகித்தது எனக்கு பெருமையாக இருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags : #CEO #UK #RESIGNATION #ராஜினாமா #இங்கிலாந்து #நிறுவனம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. CEO quits 68 billion investment firm to sit at the beach | Business News.