RRR Others USA

"எவ்வளவு பணம் வேணும்னாலும் தரேன்.. காரியத்தை முடிச்சிடு".. காதலனுடன் சேர பிளான் போட்ட திருமணமான பெண்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Mar 25, 2022 06:31 PM

வீட்டில் தனியாக இருந்த நபரைக் கொலை செய்ய வேண்டி, மர்ம நபர் ஒருவர் புகுந்த நிலையில், அவரை பிடித்து விசாரித்த போது, பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியானது.

Namakkal wife plans revealed after police enquiry

“அவர் ஒரு தடவை கூட டி20 டீமுக்கு கேப்டன்ஷி பண்ணதில்ல”.. ஜடேஜாவுக்கு இருக்கும் சிக்கல்.. முன்னாள் சிஎஸ்கே வீரர் கருத்து..!

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் பகுதியை அடுத்த சண்முகா நகரைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் நாமக்கல் பகுதியில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

நடராஜனின் மனைவியின் பெயர் கிருத்திகா. இந்த தம்பதியருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் ஆகியோர் உள்ளதாக கூறப்படுகிறது.

உள்ளே நுழைந்த மர்ம நபர்

இந்நிலையில், நேற்று கிருத்திகா அருகேயுள்ள கடை ஒன்றில் பொருள் வாங்கி விட்டு வருவதாக நடராஜனிடம் கூறி விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது, வீட்டில் நடராஜன் மட்டும் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில், திடீரென வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், நடராஜனை தாக்கியதோடு, ஆயுதம் ஒன்றைக் கொண்டு சரமாரியாக தாக்கவும் செய்துள்ளார்.

ஓடி வந்த அக்கம் பக்கத்தினர்

எதிர்பாராத நேரத்தில் தனக்கு நேர்ந்த சம்பவத்தால் அலறித் துடித்த நடராஜனின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். மேலும், அந்த மர்ம நபரையும் பிடித்து பரமத்திவேலூர் போலீசாரிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. அதே போல, காயங்களால் அவதிப்பட்ட நடராஜனை மீட்டு, கோவையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மேல் சிகிச்சைக்கு வேண்டி சேர்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விசாரணையில் அதிர்ச்சி

இதனிடையே, பிடிபட்ட நபரிடம் போலீசார் விசாரித்ததில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. நத்தக்காடு என்னும் பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரன் என்ற அந்த நபர், நடராஜனை தீர்த்துக் கட்ட வேண்டி வந்துள்ளார். இதற்கு பின்னால் இருந்தவர்கள், நடராஜனின் மனைவி கிருத்திகாவும், ஜே.சி. பி மேற்பார்வையாளராக வேலை பார்த்து வரும் கோபால் என்பதும் தெரிய வந்தது.

Namakkal wife plans revealed after police enquiry

தகாத உறவு

இதனையடுத்து, கிருத்திகாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் சொன்ன தகவல்களின் படி, நடராஜனின் ஜே.சி.பி எந்திரங்களை கோபால் என்பவர் மேற்பார்வையில் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும், நடராஜனின் வீட்டிற்கும் கோபால் அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதன் பெயரில் கிருத்திகா மற்றும் கோபால் ஆகியோர் பழகி வந்துள்ளனர். நாளடைவில் இருவருக்கும் இடையில் தகாத உறவும் உருவாகியுள்ளது.

குடும்ப தகராறும் நடந்துருக்கு

அது மட்டுமில்லாமல், நடராஜன் வீட்டில் இல்லாத நேரத்தில், இருவரும் தனியாகவும் இருந்து வந்துள்ளனர். மனைவியின் போக்கு பற்றி, நடராஜனுக்கு தெரிய வர, இருவரையும் கண்டித்துள்ளார் அவர். இதனால், கணவர் மனைவி இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

திட்டம் போட்ட கிருத்திகா

அதன் பின்னர், நடராஜனை தீர்த்துக் கட்டினால் தான், தங்களின் உறவுக்கு இடையூறு வராது என்பதற்காக வேண்டி திட்டம் போட்டுள்ளனர், கிருத்திகா மற்றும் கோபால் ஆகியோர். பிறகு, யோகேஸ்வரனிடம் இது பற்றி பேசி, பணத்தினையும் அவர்கள் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தெரிய வந்த உண்மை

கிருத்திகாவின் திட்டப்படி, கணவரை வீட்டில் தனியாக விட்டு விட்டு வெளியே செல்ல வேண்டும். இதனை சரியாக அவர் நிறைவேற்ற, அந்த வேளையில், உள்ளே வந்த யோகேஸ்வரன், நடராஜனை கொலை செய்யவும் முயன்றுள்ளார். ஆனால், அதற்குள் நடராஜனின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள், யோகேஸ்வரனை பிடித்து விட்டனர். அவரும் போலீசாரிடம் உண்மையை சொல்ல, கிருத்திகா மற்றும் கோபால் ஆகியோர் சிக்கிக் கொண்டனர்.

தகாத உறவின் பெயரில், கணவரை தீர்த்துக் கட்ட வேண்டி, மனைவி போட்ட திட்டம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"சிஎஸ்கே'வ விட்டு கெளம்ப பிளான் போட்ட ஜடேஜா?.." முன்னாள் வீரர் சொன்ன விஷயம்.. என்னங்க சொல்றீங்க?

Tags : #NAMAKKAL #WIFE #HUSBAND #POLICE #POLICE ENQUIRY #REVEAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Namakkal wife plans revealed after police enquiry | Tamil Nadu News.