'டெஸ்ட் பண்றேன்னு சொல்லி...' 'தகாத முறையில என் உடம்ப தொட்டார்...' - கொரோனா பாதித்த பெண்ணிற்கு நடந்த கொடுமை...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூரில் கொரோனா வைரஸ் பாதித்த நோயாளியை மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இயங்கும் ஒரு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை வந்த பெண் நோயாளியிடம் தகாத முறைகளில் நடந்து கொண்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் கடந்த ஜூலை 25-ஆம் தேதி இரவு மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து கூறிய பாதிக்கப்பட்ட பெண், பரிசோதனை செய்வதாக கூறி அறைக்குள் நுழைந்த மருத்துவர் தன்னுடைய அனுமதியின்றி உடலின் பாகங்களை தகாத முறையில் தொட்டதாகவும், மேலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இந்த கொடூர சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்மணி, கொரோனா வார்டின் நோடல் அதிகாரியிடம் தெரிவித்ததையடுத்து, கடந்த ஜூலை 30-ஆம் தேதி மருத்துவமனையில் புகார் அளிக்கப்பட்ட பின் வி.வி.புரம் காவல் நிலையத்திலும் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் குறித்து மருத்துவமனை அதிகாரிகள் இதுவரை போதுமான விவரங்களை வழங்கவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியான அறிக்கையின்படி, சம்பவம் நடந்த மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் கூறும் போது, இந்த குற்ற செயலில் ஈடுபட்ட மருத்துவரை அடையாளம் காட்டும் பணி நடந்து வருகிறது. மேலும் இன்னும் ஓரிரு நாட்களில் மருத்துவமனை தனது அறிக்கையின் விவரங்களை போலீசில் சமர்ப்பிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
