'10 லட்சம்' பேர் தங்கியுள்ள உலகின் பெரிய 'அகதிகள் முகாம்...' '2 பேருக்கு கொரோனா பாசிடிவ்...' 'அடுத்து நடக்கப் போகும் விபரீதம்...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | May 15, 2020 04:07 PM

வங்கதேசத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் வாழ்ந்து வருபவர்களை கொரோனா வைரஸ் தாக்கத் துவங்கியுள்ளது.

Corona impact in the world’s largest refugee camp

உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாம் வங்கதேசத்தில் உள்ள காக்ஸ் பஜாரில் அமைந்துள்ளது. அங்கு கிட்டதட்ட 10 லட்சம் ரோஹிஞ்சா அகதிகள், மிக நெருக்கமாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், அங்குள்ள இரண்டு ரோஹிஞ்சா அகதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முகாமில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் 1,900 பேர் பரிசோதனைக்காகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமான காக்ஸ் பஜாரில் சுமார் 10 லட்சம் அகதிகள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் கொரோனா பரவலை உடனடியாகத் தடுக்கவில்லை என்றால், பல்லாயிரக் கணக்கானவர்கள் உயிரிழப்பர்' என, வங்கதேசத்தின் சேவ் தி சில்ட்ரன் அமைப்பின் சுகாதார இயக்குநர் கூறியுள்ளார். ஆனால், இந்த எச்சரிக்கைகளை முகாம் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.