'எனக்கே விபூதி அடிக்க பாக்குறியா'...'டிரம்புக்கு தினந்தோறும் பரிசோதனை'... அவரே சொன்ன காரணம்!
முகப்பு > செய்திகள் > உலகம்தினந்தோறும் பரிசோதனை செய்து கொள்ள டிரம்ப் முடிவு செய்துள்ளதாக, அவரே வெள்ளைமாளிகையில் நிருபர்களிடம் கூறியுள்ளார்.
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவை புரட்டி எடுத்து வருகிறது. உலக அளவில் வைரசால் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்தோர் எண்ணிக்கை 14 லட்சத்தை நெருங்குகிறது. ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு 2 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ராணுவ அதிகாரிக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, டிரம்புக்கும், துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது.
இதையடுத்து நிருபர்களை சந்தித்த டிரம்ப், '' எனது ராணுவ அதிகாரி ஒரு நல்ல மனிதர். ஆனால் நான் அவரை நேரடியாக தொடர்பு கொண்டது இல்லை. இருப்பினும், நாங்கள் பரிசோதனை செய்து கொண்டோம். தினந்தோறும் பரிசோதனை செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம்.'' என டிரம்ப் கூறியுள்ளார்.