'மூணு' நாளைக்கு 'ஒண்ணு' தான்... தமிழகத்தில் 'மதுபானம்' வாங்க... 'அதிரடி' நிபந்தனைகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் நாளை முதல் மதுக்கடைகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனை இன்று விசாரித்த நீதிமன்றம், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கான தடையை மறுத்து தீர்ப்பளித்தது.
ஆனால், அதே வேளையில் சில நிபந்தனைகளையும் உயர்நீதிமன்றம் விதித்துள்ளது. மூன்று நாளுக்கு ஒருமுறை ஒருவருக்கு ஒரு பாட்டில் மட்டுமே விற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதே போல வாங்க வருபவரின் பெயர், முகவரி மற்றும் ஆதார் என்னுடன் ரசீது தரப்பட வேண்டும். ஆன்லைன் வழியாக பணம் செலுத்தும் வழியை டாஸ்மாக் ஏற்படுத்த வேண்டும். அப்படி பணம் செலுத்துபவருக்கு இரண்டு பாட்டில்கள் பெற்றுக் கொள்ளலாம். அனைத்தையும் விட முக்கியமாக சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்பு கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன்னதாக தமிழக அரசு அறிவித்த விளக்கத்தில் மது விற்பனையை ஆன்லைனில் மேற்கொள்ள முடியாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன் சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக பின்பற்றப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.