தமிழகத்தில் செயல்பட ஆரம்பித்த 'மதுக்கடைகள்'... ஒரே நாளில் 'இத்தனை' கோடி வசூலா?
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மூன்றாம் கட்டமாக ஊரடங்கு வரும் மே மாதம் 17 - ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்தியாவில், பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் சில கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகள் செயல்பட அரசு தெரிவித்திருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னதாக கர்நாடகா, உத்தரபிரதேசம், டெல்லி போன்ற மாநிலங்களில் மதுக்கடைகள் செயல்பட ஆரம்பித்தது. சுமார் நாற்பது நாட்களுக்கு பின்னர் மதுக்கடைகள் இயங்க ஆரம்பித்ததால் மது பழக்கம் உடையவர்கள் அதிகம் கடைகளை சூழ ஆரம்பித்தனர்.
இதனால் பல மாநிலங்களில் முதல் நாள் மது விற்பனை சுமார் 40 கோடிக்கு மேல் இருந்தது. இன்று முதல் தமிழகத்தில் மதுக்கடைகள் செயல்பட ஆரம்பித்த நிலையில், இன்று ஒரு நாளில் சுமார் 150 முதல் 160 கோடி ரூபாய் வரை மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மதுக்கடைகள் திறக்கப்படாத நிலையில் தமிழகம் முழுவதும் இத்தனை கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் வரும் நாட்களில் இன்னும் அதிக ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.