BREAKING: TASMAC மதுக்கடைகளுக்கு 'தடை'... உயர்நீதிமன்றம் 'அதிரடி' உத்தரவு... இனி இப்படி மட்டுமே வாங்க முடியும்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாடு முழுவதும் மூன்றாம் கட்டமாக ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் கட்டுபாடுள்ள பகுதிகளில் மதுக்கடைகள் இயங்கலாம் என இந்திய அரசு தெரிவித்திருந்தது.
இதனையடுத்து பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகள் திறந்த நிலையில் பல கோடி மதிப்பில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது. அதே போல தமிழகத்திலும் சென்னையை தவிர மற்ற பகுதிகளில் வைரஸ் கட்டுபாடுள்ள பகுதிகளில் மதுக்கடைகள் நேற்று முதல் செயல்பட தமிழக அரசு அறிவித்திருந்தது. சுமார் நாற்பது நாளுக்கு மேல் மதுக்கடைகள் திறந்ததால் மது பழக்கம் உடையவர்கள் மதுக்கடைகளை சூழ்ந்தனர்.
இந்நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்றம் நாளை முதல் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகள் மூட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதே நேரம் ஆன்லைனில் வரும் மே 17 - ஆம் தேதி வரை மதுபானங்களை விற்பனை செய்யலாம் எனவும் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டதால் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட நாளான நேற்று மட்டும் சுமார் 170 கோடி வரை மது விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.