தீபாவளி, பொங்கல் பண்டிகை போல் நேற்று ஒரே நாளில் அசரவைக்கும் மதுவிற்பனை.. வசூல்ல இந்த மாவட்டம் தான் முதல் இடம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 170 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டக்கபட்டுள்ளது. மேலும் ஊரடங்கில் சில தளர்வுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி மதுக்கடைகளை திறக்க சில கட்டுப்பாடுகளுடன் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து கர்நாடகா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்று முதல் தமிழகத்தில் சென்னை மாநகர காவல்துறைக்கு உட்பட்ட பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. காலை 10 மணிக்கு மதுக்கடைகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அதிகாலை 5 மணியில் இருந்த கடைக்கும் முன் குடிமக்கள் குவிய தொடங்கினர். மதுபாட்டில்கள் வாங்க வருவோர் கட்டாயம் ஆதார் கார்டு கொண்டு வர வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியது. சமூக இடைவெளியை கடை பிடிக்க ஒரு சில கடைகளில் தடுப்பு அமைக்கபட்டிருந்தன. சுமார் 2, 3 கிலோமீட்டர் தூரம் நின்று குடிமக்கள் ஆர்வமாக மதுபாட்டிகளை வாங்கி சென்றனர்.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டில் 172 கோடியே 59 லட்சத்திற்கு மது விற்பனை ஆகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் நேற்று 46.78 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி முதல் இடத்தை பிடித்துள்ளது. இதனை அடுத்து கோவையில் 34 கோடி ரூபாய்க்கும், சேலத்தில் 33 கோடி ரூபாய்க்கும், திருச்சியில் 32 கோடி ரூபாய்க்கும் மதுவிற்பனை நடந்துள்ளதுள்ளன. நேற்று ஒரு நாள் மட்டும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை தினக்களில் விற்பனையாகும் அளவுக்கு மதுவிற்பனை ஆகியுள்ளது. சென்னையிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டிருந்தால் வசூல் ரூ.250 கோடியை எட்டிருக்கும் எனக் கூறப்படுகிறது.