"2 கி.மீ நீளத்துக்கு குறையாத வரிசை!".. காலை 6 மணி முதலே.. சிறப்பு தரிசனம் போல் காத்திருந்த மதுப்பிரியர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுக்கடைகளில் 2 கி.மீ நீளத்தையும், பல மணி நேரத்தையும் பொருட்படுத்தாமல் மதுப்பிரியர்கள் வரிசையில் காத்திருக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.
கொரோனா எனும் கொடிய வைரஸால் 3 கட்ட ஊரடங்கு உத்தரவுகள் அமல்படுத்தப்பட்ட நிலையில், இன்று முதல் சிவப்பு மண்டலமான சென்னையைத் தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் தனிமனித இடைவெளி உள்ளிட்ட நிபந்தனைகளுடனும், வயது வாரியான நேரக் கட்டுப்பாட்டு நிபந்தனைகளுடனும் டாஸ்மாக் திறக்கப்பட்டது.
இந்நிலையில் திருவிழா மற்றும் பெருங்கோயில்களில் சிறப்பு தரிசனத்துக்கு வரிசையில் நிற்பது போல் 2 கி.மீ நீளம் வரையிலும் மக்கள் காலை 6 மணி முதலே வெகுநேரம் நின்று தங்களுக்கான மதுவை வாங்கிச் செல்லும் வீடியோக்களும் புகைப்படங்களும் இணையதளங்களிலும், சமூக ஊடகங்களிலும் வலம் வருகின்றனர்.
Tags : #TASMAC #COVID19INDIA #LOCKDOWN