'சென்னையில் இந்த ஏரியாவில்’... ‘ஜனவரி முதல் மெட்ரோ ரயில் சேவை’... ‘வெளியான தகவல்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் வருகிற ஜனவரி மாதம் முதல் மெட்ரோ ரெயில் ஓடும் என தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை மாநகரத்தில் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் கட்டமாக விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை, பரங்கிமலை- சென்ட்ரல் இடையே மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை நடந்து வருகிறது.
இந்நிலையில், பயணிகள் - பொதுமக்கள் வரவேற்பை தொடர்ந்து வண்ணாரப்பேட்டை - விம்கோ நகருக்கு 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 2 சுரங்க ரெயில் நிலையங்களும் 6 உயர்மட்ட ரெயில் நிலையங்களும் அமைக்கப்பட்டது.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது, ‘வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரெயில் பணிகள் பெருமளவு முடிந்துவிட்டது. தற்போது மின் கேபிள்கள், சிக்னல் கருவிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
டிசம்பர் மாதம் இறுதியில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடைபெறும். அதைத் தொடர்ந்து ஜனவரி மாதம் மெட்ரோ ரெயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்ற பிறகு பாதுகாப்பு ஆணையரின் ஆய்வுக்குப் பின் ரெயில்கள் இயக்கப்படும்’ என்று அவர் கூறினார்.
வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டதும், பயணிகள் நேரடியாக விம்கோநகர் - விமான நிலையத்துக்கு 32 கிலோ மீட்டர் தூரத்தை எளிதில் கடக்க முடியும். இதனால் பொதுமக்கள் பெரிதும் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்
