'சென்னையை சிவப்பு மண்டலமாக்கிய கொரோனா...' 'இந்த 5 மண்டலங்களில் 100 பேருக்கு மேல் பாதிப்பு...' 'கட்டுப்பாட்டை அதிகப்படுத்த முடிவு...'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | May 02, 2020 09:00 AM

சென்னையில் அதிவேகமாக பரவி வரும் கொரோனா தொற்றால், ஐந்து மண்டலங்களில் 100 பேருக்கு மேல் பாதிப்படைந்துள்ளனர்.

More than 100 people are affected in these five zones of Chennai

சென்னையில் ராயபுரம், திரு,.வி,க.நகர், தேனாம்பேட்டையைத் தொடர்ந்து, தற்போது தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 100-ஐக் கடந்துள்ளது. இந்த 5 மண்டலங்களில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிவேகமாக உயர்ந்து கொண்டே வருகிறது.

சென்னையில் அதிகபட்சமாக திரு.வி.க நகரில் 259 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராயபுரத்தில் 216 பேரும்,  தேனாம்பேட்டையில் 132 பேரும், கோடம்பாக்கத்தில் 116 பேரும், தண்டையார்ப்பேட்டையில் 101 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த 5 மண்டலங்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100 ஐ கடந்துள்ளது.

இதற்கு அடுத்தாற்போல், அண்ணாநகரில் 91 பேரும் பாதித்து உள்ளனர்.

வளசரவாக்கத்தில் 60 பேரும், அம்பத்தூரில் 33 பேரும், அடையாறில் 21 பேரும்,  திருவொற்றியூரில் 19 பேரும்,  ஆலந்தூரில் 9 பேரும், பெருங்குடியில் 9 பேரும், மாதவரத்தில் 4 பேரும்,  சோழிங்கநல்லூரில் 3 பேரும், மணலியில் 3 நபரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. சென்னையில் தண்டையாபேட்டை, திரு.வி.க.., நகர், வளசரவாக்கம் பகுதிகளில் தலா ஒருவர் என மூன்று பேர் மட்டுமே குணமடைந்துள்ளனர். சென்னை கோடம்பாக்கத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சென்னையில் தொற்று பாதித்தவர்களில் ஆண்கள் 63.01% பேரும், பெண்கள் 36.99% பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.