சோர்வாக அமர்ந்தபடி.. வயசான மனுஷன் செஞ்ச விஷயம்.. "நெட்டிசன்கள் மனதை உடைத்த வீடியோ!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇன்றைய காலகட்டத்தில் நம்மை சுற்றி நடக்கும் ஏராளமான விஷயங்கள், இணையத்தில் அதிகம் வைரல் ஆவதை நாம் பார்த்திருப்போம்.

இதில், வகை வகையான கண்டென்ட்டுகள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டே உள்ளன. அதில் சில விஷயங்கள் அதனை பார்க்கும் நேரத்தில் ஒரு தாக்கத்தை உருவாக்கும். அடுத்த சில நிமிடங்களில் கூட அவற்றை நாம் கடந்து செல்ல முடியும்.
ஆனால், அதே வேளையில் இன்னும் சில வீடியோக்கள் நாம் பார்த்து பல மணி நேரம் கடந்தால் கூட, அது நம்மிடையே ஏற்படுத்திய தாக்கம் என்பது சிறிதளவு கூட குறையாமல் அப்படியே இருக்கும். அப்படி வைரலாகும் விஷயங்கள், ஒட்டுமொத்த நெட்டிசன்களின் கவனத்தை பெறுவதுடன் மட்டுமில்லாமல், மிகவும் எமோஷனல் ஆகவும் பலரை உணர வைக்கும்.
இந்நிலையில், தற்போது அப்படி ஒரு வீடியோ தான் நெட்டிசன்கள் பலரையும் வெகுவாக கவர்ந்திழுத்து வருகிறது. சுமார் 18 வினாடிகள் வரை ஓடும் இந்த வீடியோவில் முதியவர் ஒருவர், குடில் ஒன்றில் இருக்கும் நாற்காலி ஒன்றில் அமர்ந்த படி இருக்கிறார். அத்துடன் அன்றைய தினத்தில் தான் ஈட்டிய வருமானம் என்ன என்பதை சரி பார்த்துக் கொண்டிருக்க, அவரது முகத்தில் வேலை செய்த களைப்பு அப்படியே தெரிகிறது.
தள்ளாடும் வயதில் கூட தனது சம்பாத்தியத்தில் நிலைத்து நிற்கும் அந்த முதியவர், கிடைத்த பணத்தை மிகவும் கவனமாக, சோர்வு கலந்த முகத்துடன் எண்ணிக் கொண்டிருக்கும் வீடியோ, இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும், இந்த வீடியோ எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரம் சரிவர தெரியவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்த வீடியோவைக் காணும் நெட்டிசன்கள் பலரும், அந்த முதியவரின் செயலால் வியந்து போயுள்ளனர். மேலும், அவரது உழைப்புக்கு பாராட்டுகளை தெரிவித்து வருவதுடன் அதிகம் பகிர்ந்தும் வருகின்றனர்.
दिनभर की कमाई 🥺❤️ pic.twitter.com/pHEqKvflLN
— ज़िन्दगी गुलज़ार है ! (@Gulzar_sahab) September 20, 2022

மற்ற செய்திகள்
