மாட்டுக் கொட்டகையில் கேட்ட அலறல் சத்தம்.. பதறியடித்து ஓடி வந்த மாமா.. சினிமாவை விஞ்சும் அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மின்சாரத்தை பாய்ச்சி கொலை செய்ய முயன்றவருக்கு மின்சாரம் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் சொரகொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சரண்ராஜ் (வயது 26). அதே பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 45). உறவினர்கள் இவர்களது விவசாய நிலங்களும் அருகே அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 5 வருடங்களாக இருவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. மேலும் நிலத்தில் உள்ள பயிர்களை மாடுகளை விட்டு மேய்ப்பது போன்ற சண்டைகளும் அடிக்கடி நடந்து வந்துள்ளது.
மின்சார வயர்
இந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு இதேபோல் ஏற்பட்ட தகராறு கைகலப்பு வரை சென்றுள்ளது. இந்த சூழலில் நேற்றிரவு சுமார் 12 மணியளவில் சரண்ராஜ் அவரது வீட்டு அருகே உள்ள மாட்டுக் கொட்டகையில் கட்டிலில் தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஏழுமலை, அருகே உள்ள தனது நிலத்தில் இருந்து மின்சார வயர் மூலம் மின்சாரத்தை கொண்டு வந்து சரண்ராஜ் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
கண்ணில் கரெண்ட் ஷாக்
அனைவரும் தூங்கியதும், மின்சார ஒயரின் நுனியில் சிறு கம்பியைக் கட்டி, தூங்கிக் கொண்டிருந்த சரண்ராஜின் கண்ணில் வைத்துள்ளார். கரெண்ட் ஷாக் அடித்ததும் அலறியடித்து சரண்ராஜ் எழுந்துள்ளார். அப்போது ஏழுமலையின் கையில் வைத்திருந்த மின்சார வயர் எதிர்பாராத விதமாக அவர் மீதே பட்டது. இதனால் மின்சாரம் பாய்ந்து ஏழுமலை சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
உயிரிழந்த மாமா
இதனிடையே சரண்ராஜின் அலறல் சத்தம் கேட்ட அவரது மாமா ரேணுகோபால் அங்கு வேகமாக ஓடிவந்துள்ளார். ஆனால் கீழே கிடந்த மின்சார ஒயரை கவனிக்காததால், அதனை மிதித்ததால் அவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதனை அடுத்து தகவலறிந்து வந்த போலீசார், உயிரிழந்த ஏழுமலை மற்றும் ரேணுகோபால் ஆகிய சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் தீவிர விசாரணை
மின்சாரம் பாய்ந்த சரண்ராஜ் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
