ஊராட்சி மன்றத் தலைவரான ‘இரண்டு மனைவிகள்’.. உள்ளாட்சி தேர்தலில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jan 03, 2020 10:45 AM

வந்தவாசி அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் இரு மனைவிகளும் ஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.

Local body election results two wives elected Panchayat Chief

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியத்தை சேர்ந்த வழூர் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகரன். இவர் அப்பகுதியில் செல்வி, காஞ்சனா என்ற மனைவிகளுடன் வசித்து வருகிறார். கடந்த முறை வழூர் அகரம் ஊராட்சி மன்ற தலைவராக தனசேகரன் இருந்தார். இந்த முறை வழூர் அகரம் கிராம தலைவர் பதவிக்கு செல்வியையும், கோவில்குப்பம் கிராம தலைவர் பதவிக்கு காஞ்சானாவையும் சுயேட்சையாக போட்டியிட வைத்தார். இந்த நிலையில் இருவரும் ஊராட்சி மன்ற தலைவர்களாக வெற்றி பெற்றுள்ளனர்.

அதேபோல் கிருஷ்ணகிரி அருகே 21 வயது கல்லூரி மாணவி ஜெய்சந்தியா சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம் 2-வது வார்டு ஒன்றிய குழுவில் திமுக சார்பில் போட்டியிட்ட முதல் திரு நங்கை ரியா வெற்றி பெற்றுள்ளார்.

Tags : #LOCALBODYELECTIONRESULTS #TIRUVANNAMALAI