ICC RANKINGS: ஒரே மேட்சில் உச்சத்துக்கு சென்ற ஜட்டு… ஐசிசியின் புதிய தரவரிசை
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவிந்தர ஜடேஜா ஐசிசி தரவரிசையில் முதல் இடம் பிடித்துள்ளார்.
RCB-யின் அடுத்த கேப்டன் யாரு? - அணி நிர்வாகம் கொடுத்த அதிரடி அப்டேட்.. குஷியில் ரசிகர்கள்..!
காயத்தில் இருந்து மீண்ட ஜடேஜா
இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஜடேஜா, ஒரு நாள், டெஸ்ட் மற்றும் டி 20 ஆகிய மூன்று வகையிலான போட்டிகளிலும் சமீப ஆண்டுகளில் கலக்கி வருகிறார். இந்நிலையில் அவர் டி 20 உலகக்கோப்பையில் காயம் அடைந்ததால் கடந்த இரண்டு மாதங்களாக ஓய்வில் இருந்தார். அதையடுத்து இப்போது இலங்கை அணிக்கு எதிரான தொடரில் காயத்தில் இருந்து மீண்டார். விரைவில் ஐபிஎல் மற்றும் டி 20 உலகக்கோப்பை தொடர் வர உள்ளதால் ஜட்டுவின் கம்பேக் ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது,
கபில்தேவ் சாதனையை முறியடித்த ஜட்டு
இந்த போட்டியில் ஏழாவது வீரராகக் களமிறங்கிய ஜடேஜா ஆரம்பம் முதலே இலங்கை அணி பந்துவீச்சாளர்களை அதிரடியாகக் கையாண்டார். சதமடித்த பின்னர் மேலும் அதிரடியைக் கூட்டிய அவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் சேர்த்தார். இதில் 17 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடக்கம். 7 ஆவது இடத்தில் இறங்கி இந்திய வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்னர் கபில்தேவ் அந்த இடத்தில் இறங்கி 163 ரன்கள் சேர்த்ததே அதிகமாகும். பேட்டிங்கில் இப்படி சாதனைப் படைத்த ஜடேஜா பவுலிங்கிலும் இலங்கை வீரர்களை திக்கு முக்காட வைத்தார். முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜா இரண்டாம் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டது. மொஹாலியில் நடக்கும் போட்டிகளில் அவர் மொத்தம் மூன்று முறை ஆட்டநாயகன் விருதைப் பெற்றுள்ளார்.
ஒரே போட்டியில் உச்சம்
இந்நிலையில் இலங்கைக்கு எதிராக ஆல்ரவுண்ட் பர்பாமன்ஸ் கொடுத்த ஜடேஜா ஆல்ரவுண்டர்களுக்கான ஐசிசி தரவரிசையில் மூன்றாம் இடத்தில் இருந்து முதலிடத்துக்கு சென்றுள்ளார். அவர் முதல் இடத்தில் இதற்கு முன்பே சில காலம் இருந்திருக்கிறார். இந்த பட்டியலில் மற்றொரு இந்திய வீரரான அஸ்வின் இரண்டாம் இடத்தில் இருந்து ஒரு இடம் பின் தங்கி மூன்றாம் இடத்தில் இருக்கிறார். ரவிந்தர ஜடேஜா 406 புள்ளிகளும், அஸ்வின் 347 புள்ளிகளும் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் வேறு எந்த இந்திய வீரரும் இல்லை.
ஜேசன் ஹோல்டர் இரண்டாவது இடத்திலும், ஷகிப் அல் ஹசன் 4 ஆவது இடத்திலும், பென்ஸ் ஸ்டோக்ஸ் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். மிட்செல் ஸ்டார்க், கைல் ஜேமிசன், கிராண்ட்ஹோம், கம்மின்ஸ், கிரிஸ் வோக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். காயத்தில் இருந்து மீண்ட முதல் போட்டியிலேயே ஜடேஜா முதல் இடத்துக்கு முன்னேறி இருப்பது ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
கிரிக்கெட்டில் காலம் காலமாக இருந்த பழக்கத்தை மாற்றப் போகும் ஐசிசி… ஏன் தெரியுமா?