'டீம் ஒர்க் செஞ்சு அடகு வச்ச நகைகள் அபேஸ்'...செஞ்சதே இவங்கதானா?... பிரபல வங்கியில் துணிகரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Aug 23, 2019 11:03 AM

அடகு வைத்த ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை, வங்கி மேலாளர் தலைமையில் ஊழியர்கள் திருடி விற்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Jewels missing case in KVB bank manager and staff arrested

திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் கோயில் எதிரில் உள்ள சன்னதி தெருவில் இயங்கி வரும் கரூர் வைசியா வங்கியில் நகை கடன், விவசாய கடன் உட்பட பல்வேறு கடன்கள் வழங்கப்படுகிறது. இங்கு ஏராளமான பொதுமக்கள் தங்களின் பொருளாதார தேவைகளுக்காக தங்க நகைகளை அடகு வைத்துள்ளார்கள். அவ்வாறு வைக்கப்பட்டுள்ள நகைகளை மாதத்திற்கு 2 முறை சரி பார்ப்பது வழக்கம்.

அந்தவகையில் கடந்த மே மாதம் இறுதியில் வங்கியில் உள்ள தங்க நகைகளை சரிபார்க்கும் போது வாடிக்கையாளர்கள் வைத்த தங்க நகைகள் அடங்கிய 40 பாக்கெட்கள் கணக்கில் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் காணமல் போன நகைகளின் மதிப்பு ஒன்றரை கோடி ரூபாயாகும். இதையடுத்து விழுப்புரம் கோட்ட முதன்மை மேலாளர் முரளி கடந்த ஜீன் மாதம் 4ம் தேதி, நகைகள் காணாமல் போனது குறித்து காவல்துறையில் புகார் அளித்தார். வங்கியில் கொள்ளை சம்பவம் எதுவும் நடக்காத நிலையில் நகைகள் காணாமல் போனது காவல்துறைக்கு வியப்பை அளித்தது.

இதையடுத்து காவல்துறையின் சந்தேகப்பார்வை வங்கியின் முதுநிலை மேலாளர் சுரேஷ், நகை கடன் மற்றும் பாதுகாப்பு பெட்டக அறையின் பொறுப்பாளர் சாந்தனஅரிவிக்னேஷ் மற்றும் லாவண்யா, தேன்மொழி, இசைவாணி, கார்த்திகேயன், மணிகண்டன் உள்ளிட்ட 7 பேரின் மீது திரும்பியது. மேலும் வங்கியில் உள்ள நகைகளுக்கு இந்த 7 பேரும் தான் பொறுப்பு என்பதால் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அனைவரும் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். இதனைத்தொடர்ந்து 7 பேரையும் கைது செய்த காவல்துறையினர், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, அவர்களை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : #KARUR VYSYA BANK #TIRUVANNAMALAI #JEWELS #BANK MANAGER