மொட்டை மாடியில் தூங்கிய பஸ் டிரைவருக்கு நேர்ந்த சோகம்.. போலீசார் விசாரணை.. அதிர்ச்சி சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மொட்டை மாடியில் தூங்கியவர் தூக்கத்தில் நடந்த போது கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 32). இவர் தனியார் பேருந்தில் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். தாய், தந்தை இறந்துவிட்டதால் சசிகுமார் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.
கடந்த 12-ம் தேதி அதிகாலை சசிகுமார் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீர் என்று எழுந்த சசிகுமார் தூக்கத்தில் நடக்க ஆரம்பித்தாக சொல்லப்படுகிறது. இதில் மொட்டை மாடியின் விழிம்புக்கு சென்ற அவர், கால் தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் சசிகுமாரை மீட்டு ஆரணி அரசு மருத்துவனையில் அனுமதித்தனர். இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சசிக்குமார், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சசிகுமாரின் அண்ணன் தமிழரசன் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
