'மனைவியை பிரிந்து கல்லூரி மாணவியுடன் சென்ற திருமணமானவர்!'.. நண்பனுக்கு போன் செய்து கூறிய 'அதிர்ச்சி' தகவல்.. நேரில் சென்று பார்த்தபோது நடந்த 'கோரம்!'
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் சமையல் மாஸ்டராக பணியாற்றி வந்தவர் தாமஸ் (வயது 26). கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணமான இவருடைய மனைவி தற்போது கர்ப்பிணியாக உள்ளார். தாமஸ் வேலைபார்த்த ஓட்டல் அருகில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்த அமீர் என்பவரின் மகள் ரிஸ்வானா (19).

தனியார் கல்லூரியில் படித்து வந்த ரிஸ்வானாவும் தாமசும் ஒருவரையொருவர் காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில், கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியே சென்ற ரிஸ்வானா மீண்டும் வீடு திரும்பாததால், இதுகுறித்து அமீர் கீழ்பென்னாத்தூரில் போலீஸாரிடத்தில் புகார் அளித்தார். இதனிடையே தாமஸ், ரிஸ்வானாவுடன் வீட்டை விட்டு வெளியேறியது பற்றி, தனது நண்பருடன் பகிர்ந்ததுடன், இது குறித்து இரண்டு வீட்டாருக்கும் தெரிந்தால் பிரச்சினை ஆகும் என்று பயந்து கத்தாழம்பட்டு புதூரில் உள்ள சுடுகாட்டில் இருந்தபடி விஷம் அருந்தியதாகத் தெரிவித்துள்ளார்.
அதை அவர் போலீஸாருக்கு தெரிவித்ததை அடுத்து அனைவரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு மயங்கிய நிலையில் இருந்த தாமஸ், ரிஸ்வானா ஆகியோரை மீட்டு மருத்துவமனை அழைத்துச் சென்றபோது, டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து அவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இதனை அடுத்து 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டதுடன், கீழ்பென்னாத்தூர் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.

மற்ற செய்திகள்
